8. சாரா மித்ரா (Sara Mithra95)

442 67 65
                                        

செங்கதிரோன் தன் செவ்விதழை சுருக்கி இருளை பரப்ப ஆயத்தமாகிட பட்சிகள் அனைத்தும் தன் பிள்ளைகளுக்கு உணவளிக்க கூட்டிற்கு திரும்பி பறந்தோடும் இரம்மிய மாலைபொழுதில்...
தன்னவளிடம்  நடந்த வாக்குவாதத்திற்கு பிறகு,

"அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே" என குதுகலத்துடன் தனக்கான இணையை கண்டறிந்த ஆனந்தத்தில் பாடிக்கொண்டு
வீட்டினுள் நுழைந்தான் கதிர்.

முகத்தில் சிரிப்பு மின்ன புதுவித பொலிவுடன்... இருக்காதா பின்னே? தன் மகனுக்கு பெண் தேடி இருநூறு ஜாதகங்களுக்கு மேல் பார்த்து ஒன்று பிடித்தால் மற்றொன்று பிடிக்காமல் இது அதுவென எதும் சரிவராமல், அலைந்து திரிந்து கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைத்து இன்று ஜோதிட ரீதியாகவும் சரிபட, இரு வீட்டினருக்கும் சம்மதம் என ஆனதும் தன் ஆசை மகனுக்கான அழகியை தேர்ந்தெடுத்த மகிழ்ச்சி தான்...  "கதிரு! இங்க வாப்பா" என அழைத்தார் மீனாட்சி.

"சொல்லு மீனுகுட்டி. என்ன விசயம்?  முகமெல்லாம் பொலிவா இவ்ளோ சந்தோசமா இருக்க... ?"

கதிர்..  அவன் அம்மா செல்லம்,  தந்தையிடம் மரியாதை கலந்த அன்புடன் திகழ்வான். தன் அன்னையை செல்லமாக மீனுகுட்டி என்றே அழைப்பான்.

"ஏன்டா நா சந்தோசமா இருந்தா பொறுக்காதே உனக்கு ...?"  என்ற தாயிடம், "அப்டி இல்ல மீனு.. காரணத்த தெருஞ்சுக்கத்தான்.." என சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் அப்பாவின் செருமல் சத்தம் கேட்க, தாய், மகன் இருவரும் அவர் பக்கம் பார்வையை திருப்பினர்.

"சொல்லுங்கப்பா?" என அவன் பேச்சை ஆரம்பிக்க,
"கதிரு பொண்ணு வீட்டுல சம்மதம் சொல்லிட்டாங்கப்பா. நம்மள நாளைக்கே பொண்ணு பார்க்க வர சொல்லிருக்காங்க. பொண்ணுகிட்ட உன் போட்டோ காட்டலயாம் நேர்லயே பார்க்கட்டும்னு சொன்னாங்க. நானும் உன்னால லீவ் போட முடிஞ்சா கேட்டுட்டு சொல்றேனு சொல்லிருக்கேன்." என அவர் பேசி முடிப்பதற்குள், "நான் லீவ் சொல்றேன்பா. ஒன்னும் பிரச்சனை இல்ல" என்றான்.

கதிரழகிWhere stories live. Discover now