காதலின் மரணம்

203 26 57
                                    

பள்ளிப் பருவத்தில் கம்பளிப் பூச்சியென கட்டி வைத்த என் சிறகுகள் - கல்லூரி வந்தபின்னே வண்ணத்துப்பூச்சியென வண்ணம் பெற்று விண்ணை முட்டி பறந்து செல்ல.

காட்சிகள் புதிதாக... காண்போரும் புதிதாக காடெங்கும் காற்றாடி - மலையெங்கும் விளையாடி தடையேதுமில்லாது சுற்றித் திறிந்தது என் மனசு...

என்னற்ற எண்ணங்கள் என் கனவுக்கு இரை போட...
வானம்பாடியாகி வட்டமடித்தேன் நிலவோடு...

வருடம் சில உருண்டோட...
கண் கொண்ட தூண்டிலால் காதலென்னும் சிறை நிரப்ப என் முன்னே தோன்றினாய் நீ...

விதி என்னை
விடவில்லை - விரட்டி
வந்தேன் நான் உன்னை...

மலைமீது உருவாகி ஊரோடு உறவாடி...
பயிர்களுக்கு உயிர் கொடுத்து
கடலோடு கலந்தோடும் நதியாக

எங்கோ தொடங்கிய என் வாழ்வு
உன் ஒற்றை வார்த்தயில் உயிர் நீத்தது...

கோபம் கொண்ட உன் கண்கள்
இரண்டும் கொல்லி வைத்தது
என் காதலுக்கு...

இதயம் கொளுந்து விட்டெரிந்தது
உள்ளுக்குள்...

அவளும் நானும்Where stories live. Discover now