சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது? என்று கேட்டார்கள். அவர், என்னிடம் எதுவுமில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு! என்று சொன்னார்கள். அவர், என்னிடம் ஏதுமில்லை என்று பதிலளித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா? என்று கேட்டார்கள். அவர், இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது என்று கூறினார். உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொன்னார்கள்.
நூல் : புகாரி 5141
எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும், அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 30 : 21
எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எந்த ஆணும் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல் : முஸ்லிம்
தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.
தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்
தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ESTÁS LEYENDO
அழகிய செயல்
No Ficciónவாழ்க்கைக்கு தேவையான பல தேவைகளை அழகான முறையில் செய்யும் அழகிய செயல்😍😍 இதில் இருக்கும் 75% பதிவு copy paste😄😃
