கதிர்-நிலா காதல்

1.4K 76 27
                                        

காதல் இரவு..

நிலாவின் மனது இறகை போன்று மென்மையாக இருந்தது.. மனதிற்குள் இனம் புரியாத மகிழ்ச்சி..

நட்சத்திரா குழு மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியே சென்றனர்..ஹேமாவும் நவீனும் வீட்டு வாசலில் நின்று பேசினர்.. நிலா கதிருடனும் வெளியே சிறிது தூரம் நடந்து வரலாம் என்று சென்றாள்..

இருவருக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தது..அப்பொழுது ஒரு கார் வேகமாக வர கதிர் நிலாவை தன் பக்கமாக இழுத்தான்.. பிறகு இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி கை கோர்த்து நடக்கத் தொடங்கினர்..

கதிர் நிலாவிடம் "நிலா, நீ கல்லூரியில் என்னை எவ்வளவு காதலித்தாய்?? அதைப் பற்றி சொல்" என்றான்..நிலா அவனிடம் "அதை ஏன் இப்பொழுது கேட்கிறாய்?? இந்த நொடி எவ்வளவு நேசிக்கிறேன் என்று கேள்" என்றாள்..

உடனே கதிர் "சொல்" என்றான்..அதற்கு நிலா "கதிரின்றி என் வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது"..அப்பா இறந்த போது தொலைத்த அனைத்து சந்தோஷம் மற்றும் அன்பையும் உன் மூலமாக பெற்றேன்..நீ எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்.. "ஐ லவ் யூ கதிர்" என்றாள்..

உடனே கதிர் அவள் கண்ணில் ஓரத்தில் இருந்த கண்ணீர் துளிகளைத் துடைத்து..உன் காதலை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை..

உன் கண்ணீரே உன் காதலை உணர்த்தியது நிலா..இனி யாராலும் உன்னை என்னிடமிருந்து பிரிக்க முடியாது.."ஐ லவ் யூ நிலா" என்றான்..

இருவரும் மனமகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வீட்டை நோக்கி திரும்ப நடந்தனர்..

மறுபக்கம்

ஹேமா நவீனிடம் என்ன பேச?? என்று தெரியாமல் நிற்க.. நவீன் ஹேமாவிடம் "என்ன பெப்பர்?? எதுவும் பேசாமல் இருக்க"என்று கூற நவீனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது..

உடனே நவீன் " வெயிட் ராகா, எப்படி இருக்க?? என்று தனியாக சென்று பேசத் தொடங்கினான்.. ஹேமா மனதிற்குள் யாரு அந்த ராகா?? இப்போ எதுக்கு நவீனுக்கு கால் பண்றா??ஒருவேளை கேர்ல் ஃபிரண்டா இருக்குமோ??

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now