சூசைட் - 1

75 11 26
                                    

அடர்ந்த ஓங்கி உயர்ந்த மரங்கள் நிறைந்த காடு தரை முழுதும் பச்சை கொடிகள் கட்டுபாடின்றி தாறுமாறாக வளர்ந்து இருக்க மனித நடமாட்டமே இல்லாமல் நடைபாதை ஒன்று இல்லாத அக்காட்டின் நடுவில் தங்கள் கைகளை கோர்த்தவாறு உள்நுழைந்தனர் ஒரு ஜோடி.

இருவரின் முதுகு புறம் மட்டுமே தெரிய அப்பெண் சல்வார் அணிந்திருக்க அவன் நீல நிற சட்டையும் கருப்பு கால்சட்டையும் அணிந்திருந்தான்.

இருவரும் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மீண்டும் நடையை தொடர்ந்தனர். நீண்டு வளர்ந்திருந்த செடி கொடிகளை ஒரு கையால் புறம் தள்ளிக் கொண்டு மறு கையை தன் இணையோடு கோர்த்துக் கொண்டு நடந்தனர்.

இறுதியாக இருவரின் இலக்கும் வந்தடைந்து விட இருவரும் நின்ற இடம் பல்லத்தாக்கு.... காட்டின் முடிவில் ஒரு பெரிய பள்ளம் பள்ளத்தின் தொடக்கம் மீண்டும் காடு.

அந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு திரும்பினர். இருவர் கண்களும் அழுது சிவந்து வீங்கி போய் இருந்ததோடு ஆயிரம் சோகங்களையும் பாரங்களையும் தேக்கி வைத்திருந்தது. இருவருக்கும் பேசவும் பகிர்ந்துக் கொள்ளவும் ஆயிரம் எண்ணங்கள் உண்டு ஆனால் இருவருமே அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை இருவரின் ஒரே இலக்கு தற்கொலை.....

"இந்த முடிவுல உனக்கு வருத்தம் இல்லை தான தீப்தி" என்று அவன் அவளை பார்த்து கேட்க

கலங்கிய கண்களுடன் அவனை நோக்கி திரும்பியவள் "நா காதலிக்க ஆரமிச்ச அப்போவே சொன்னது தான் தீனா நீ என்ன முடிவு எடுக்கிறியோ அது தான் என் முடிவும்" என்று கூறினாள்.

அவளின் பதிலில் தீனாவின் கண்களும் மனமும் கலங்கி போனது.

வருத்தம் இருக்க தானே செய்யும் வசதியான குடும்பத்தில் பசி அழுகை துக்கம் சோகம் என்று எதையும் அறிந்திராமல் வளர்ந்தவளை இன்று கதறி அழுக வைத்ததோடு அவளை அவள் குடும்பத்தை விட்டு இப்புவியை விட்டே அழைத்து செல்கிறான் தீப்தியின் காதலனான தீனா ....

சூசைட் (Sucide)Where stories live. Discover now