1.அத்தியாயம்

300 10 12
                                    

சூரியன் முழுதாய் மறைந்து, சந்திரனற்ற மழைக்கால இரவு வேளை அது, அந்த உயர்ந்த மலை பாதையில் சீரற்ற வேகத்தோடு காரை ஓட்டிச்சென்றுக்கொண்டிருந்தாள் பெண்ணவள்.

அடிக்கும் காற்றிலும், பலத்த மழையின் ஓசையும் உயிரை கிலியூட்டும் விதமாக இருக்க, அவளோ துச்சமாக அதனை ஒதுக்கி தள்ளியதில், அவள் மிகவும் தைரியசாலி எனலாம், அத்தோடு இந்த மழையின் கோர தாண்டவத்தைவிட, அவள் மனதின் அழுத்தம் அதிகம் எனலாம்.

நிச்சயம் அவள் வாழ விரும்பவில்லை என அவளது வேகத்தினை வைத்து நினைக்கலாம். ஆனால் அவள் எண்ணங்களோ வேறு.

அவளுக்கு வாழ்வை துறக்கும் எண்ணமெல்லாம் இல்லை, ஆனால் தற்சமயம் அவளது தினசரி அழுத்தம் குறையாத வாழ்விலிருந்து ஒரு சிறு இடைவெளி, கொஞ்சம் சுதந்திரம், நிறைய சந்தோஷம். அவ்வளவே!

அவளது இருட்டிப்போன மின்னாத கண்களில் கொஞ்சமே கொஞ்சமாக நிம்மதி பூச வேண்டும். மென்மையான அந்த இதழ்களில், இயல்பாக முளைக்கும் புன்னகை வேண்டும். அது அத்தனை சுலபமில்லை. அவளது பிடிவாத குணம் கொண்ட மனதின் முன்னே! ஆனாலும் தன்னோடு போராடுகிறாள்.

இது மட்டும் போதுமா, 'அவனை மறக்க' என பிடிவாத மனம் கேட்க, அவளது இதழ்கள் கேலியாக வளைந்தன, அதில் சற்றே விரக்தியின் சாயல்.

அவனை மறப்பது அத்தனை சுலபமில்லை, ஆனால் இப்போது அவனோடு வாழ்வதும் சாத்தியமில்லை. ஆனபோதும் அவனை கண்ட அந்த முதல் நொடி, தாய் தன் சேயை காணும்போது வரும் உவகை போல, இப்போதும் அவள் முகத்தில் மிளிர்ந்தது.

கை பிடித்திருந்த கியரை மாற்றியவள், மனதையும் கொஞ்சம் மாற்ற முயன்றதன் பலனாக, பழைய நினைவுகள் குழுமியது.

பெரும் தொழிலதிபரின் மகள் அவள் என்பதால், பெரியவர்கள் வரமுடியாத காரணத்தை சுமந்துக்கொண்டு, தொழில் ரீதியான நண்பர் ஒருவரின் மகளது திருமணத்தில் கலந்துக்கொள்ள அனுப்பப்பட்டிருந்தாள். பொழுதை கழிக்கவென ஒப்புக்கொண்டு வந்தவளை, அவளை நன்கு தெரிந்தவர்கள், பரிச்சயமானவர்கள் என பலரும் அவளை கவனித்த விதத்திலே அவளது குடும்ப பின்புலத்தை உணர்ந்துவிடலாம்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now