2.அத்தியாயம்

251 11 2
                                    

காலை 9:50am, கல்லூரி பிரின்சிபால் ஆனந்தவள்ளி முன்பு, மாணவர் படையோடு நின்றிருந்தான் ஓம்கார்.

ஆனந்தவள்ளி அவனை தீயாக முறைப்பதை கண்டும் காணதவனாக அவனும் அவரை அழுத்தமாக கண்டுவிட்டு பேச ஆரம்பித்தான்.

"மேடம் ஆனந்தவள்ளி! டைம் பத்துகிட்ட ஆகப்போகுது. எக்சாம் தொடங்குற நேரமிது. அனோன்ஸ்மென்ட்ல, சீக்கிரம் எக்சாம் எழுத அசம்பிள் ஆகுங்க, அலாட் செஞ்ச ஹாலுக்கு போங்கனு விரட்ட தெரிஞ்ச உங்களுக்கு, பஸ் ஸ்டூடன்ஸ் சரியா வந்தாச்சான்னு கவனிக்க தெரியாதா?", என நிறுத்தி நிதானமாக கேட்டவனை எதிர் வார்த்தை கூற இயலாது பார்த்தார்.

டந்தது இதுவே! வழக்கமாக கல்லூரி பேருந்தில் செல்பவனில்லை ஓம்கார். ஆனால் அவனது ராயல் என்பீல்ட், சில உபகரண கோளாறுகளால் பழுது பார்க்க விடப்பட்டிருந்தபடியால், கல்லூரி பேருந்தில் செல்ல முடிவெடுத்து, உரிய நிறுத்தத்திற்கு வந்தான்.

மாணவர்கள் சிலர் கையில் புத்தகத்தோடும், ஒரு சிலர் பதட்டத்தோடும் நின்றிருப்பதை தூரத்திலிருந்தே கவனித்தவனாக நடந்து வந்தவன், "பஸ் வரல போல.", என எப்போதும் பேருந்தில் மட்டும் வரும் நண்பனிடம் கேட்க,

அந்த நண்பனோ, "அட நீ வேற மச்சான்! எக்சாம் நேரத்துல இது ஒரு தொல்லை!", என சலித்துக்கொண்டான்.

ஓம்கார் அவனை கேள்வியாக நோக்க, "மூணு வெவ்வேற ஸ்டாப்பிங் பசங்கள ஒரே பஸ்ல அழைச்சிட்டு போவானுங்கடா. கேட்டா எக்சாம் டைம்ல ஸ்டூடன்ட்ஸ் அதிகமா வராததால கம்பைன் பஸ் தான் அனுப்ப முடியும்னு காலேஜ் மேனேஜ்மெண்ட் சொல்றாங்க.", என்றதெல்லாம் அவனுக்கு புது தகவலே.

"முன்னாடியே ஏன்டா சொல்லல.", என ஓம்கார் ஆதங்கப்பட்டான். காரணம் கல்லூரியில் கவுன்சில் மெம்பர்ஸ் என்ற பெயரில் சில மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தலைமை தாங்கி நிற்பவன் ஓம்கார்.

இத்தனை நாள் இது எவ்வாறு தெரியாமல் போனது என்ற சந்தேகம் அவன் மனதுள் எழ, அதை கேட்கவே, "அட்ஜஸ்ட்மென்ட் தான் மச்சான்.", என்றதும் ஓம்கார் முகத்தில் கோபம்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now