3.அத்தியாயம்

125 10 4
                                    

ருத்துவமனையின் 125ஆம் அறை எண்ணில் ஆழ்ந்த நிலையில் கண்மூடி படுத்திருந்தான் ஷ்யாம்.

உடலெங்கும் கட்டுக்களோடும், தலையில் சுற்றிய வெள்ளைத்துணியுமே, அவன் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்து உயிர் பிழைத்து வந்துள்ளதை எடுத்துரைத்துவிடும்.

அத்தோடு அனாதரவாக அவன் இருப்பதில் அவன் நிலை உணர்ந்தாலும், அங்கு மருத்துவராக பணிபுரியம் சர்வேஷிற்கு அவன் மீது அன்பு உண்டு.

ஷ்யாமை சர்வேஷ் சந்தித்தது ஒரு கோரமான விபத்தில் தான்.

நண்பர்களோடு சுற்றுலா முடித்து, அவரவர் வீட்டில் இறங்கிவிட்டு காரை ஓட்டிக்கொண்டிருந்தான் சாவகாசமாக. அப்போது சாலை ஓரத்தில் சரிந்த மரத்தின் மீது அசௌகரிய தோற்றத்தில் அமர்ந்திருந்தான் ஒருவன். அவன் வயதை ஒத்த இளைஞன்.

நெடுஞ்சாலையில் சிறு புள்ளியை சாலையில் ஓரத்தில் ஓடங்கிப்போய் அமர்ந்திருந்தவனை நிச்சயம் யாவரும் கண்டிருக்க வாய்ப்பில்லை, ஆனால் சர்வேஷ் கண்டுக்கொண்டாது, அவனின் அதிர்ஷ்டமே!

குருதி நனைந்த அவனது தேகமும், அதீத சோர்வும் கண்டதும், காரை அவனருகே நிறுத்தியவன், விரைவாக அவனருகே சென்று, "சார்!", என தோள்தொட, அரைக்கண்ணில் சிறு கோடாக எதிரிலிருந்த சர்வேஷ் முகம் கண்டவன், அச்சமயத்தில் என்ன உணர்ந்தானென தெரியவில்லை, ஆனாலும் போராட்டமான குரலில், "கேன் யூ ப்ளீஸ் அட்மிட் மீ டூ தி ஹாஸ்பிட்டல்?", என்றான் சோர்வாக, சொன்னதோடு மயங்கி விழப்போனவனை தாங்கிக்கொண்ட சர்வேஷ், "சார்! சார் எழுங்க.", என தோள் சேர்த்து எழுப்ப, "தமிழா?", என அரை குரலில் கேட்டவன், "பேரு?", என்றிட,

அவனை தாங்கிப்பிடித்தபடியே, "சர்வேஷ்!", என்றான்.

"ம்ம்... நான் ஷ்யாம்... உயிர் பிழைப்பேனான்னு தெரியல, திரும்ப வந்தா கண்டிப்பா நாம சந்திக்கலாம்.", என தடுமாற்றத்தோடு முழுதாக மயங்கியிருக்க, சர்வேஷ் அதற்குள் காரின் பின் சீட்டில் அவனை படுக்க வைத்து, மருத்துவமனை வந்தான்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now