5.அத்தியாயம்

84 10 2
                                    

ஓம்கார் நின்றிருந்த அவளை கண்டு விழித்தான். அவள் பூஜா.... ஓம்கார் மீது ஒருதலை காதல் கொண்டவள், ஆனால் ஓம்கார் நிராகரித்துவிட்டான். வேறு துறை மாணவி என்பதால் இருவருக்கும் நேருக்கு நேர் சந்திப்பும் இல்லாததில் கொஞ்சம் ஆசுவாசத்திலிருந்தவன் இன்று அவளை காணவும் கொஞ்சம் சங்கோஜமாக உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவளை கடந்து செல்ல முனைய, பூஜா அவனை அழைத்தாள்.

"ம்ம்?", என சலிப்போடு கேள்வியாக நின்றான்.

"எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு!", என்றாள் அவன் முகத்தை படித்தவாறே.

"அதுக்கு?"

"நீ வரணும் ஓம்."

"எதுக்கு வரணும்? லுக் நீ யார் எனக்கு, முதல் தடவ உன்ன பாத்ததே நீ ப்ரபோஸ் செஞ்சப்போ தான். என் பதில சொல்லிட்டேன். அவ்ளோதான்! என்ன கல்யாணத்துக்கு கூப்பிடுற சுதந்திரத்த உனக்கு நான் கொடுக்கல, அவ்ளோ உரிமையா நீ என்ன கூப்பிடவும் கூடாது.", என கொஞ்சம் அதட்டலாகவே கூறினான்.

"இதனால தான்டா, இதனால தான் உன்கிட்ட விழுந்தேன். எவ்ளோ நல்லவன் நீ! உனக்கு ஏன் என்ன பிடிக்காம போச்சு?", என கண்ணை கசக்கினாள்.

"ப்ச்! நீ அழுகுற அளவுக்கு அவ்ளோ சீன் இல்ல.", என இதழை வளைத்தவன், அவளை கடந்து செல்லப்போக, "கண்டிப்பா வரமாட்டியா ஓம்?", என நிறுத்தினாள்.

"திரும்பவும் ஆரம்பிக்காதம்மா. நல்லா இரு, ஆனா படிப்ப விட்ராத. கட்டுனவன் விட்டாலும், படிப்பு கைவிடாது.", என போயேவிட்டான். பூஜா பெருமூச்சுவிட்டு சென்றுவிட்டாள்.

அவனது வகுப்பிற்கு வந்தான். தேர்வு சமயம் என்பதால் அனைவரும் படிப்பில் மூழ்கியிருந்தனர்.

டுத்து வந்த இருமாதங்களும் தேர்விலே கழிய, ஓம்கார் மூன்றாமாண்டில் கால் பதித்தான்.

ஆனந்தவள்ளி ஓம்காரை காணும்போதெல்லாம் முறுக்கிக்கொண்டார், அவனோ சலிப்போடு அவரை கடந்துவிடுவான்.

காலை அவன் வகுப்பிற்குள் நுழையும்போது வகுப்பு பிரதிதியாக இருக்கும் மகேஷ் ஓம்காரிடம் வந்தான், உடன் ஒரு புதியவனும் இருந்தான்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now