6.அத்தியாயம்

166 8 4
                                    

ஆதித்யாவிற்கு மாரடைப்பு என்றதும் பெற்றவர்கள் இருவரும் பதிறிப்போக, மறுபுறம் சுப்ராஜை எண்ணியும் கலங்கியிருந்தனர்.

சுப்ரஜா, ஆதி, இரு சிசுக்கள் யாரை கவனிப்பது என தெரியாது அல்லாட வேண்டிய நிலையை தவிர்க்க எண்ணி, "நீ ஆதியை பாத்துக்கோ, சுப்ரஜாவோட பார்மாலிட்டீஸ் என்னன்னு நான் பாத்துக்குறேன்.", என ஆதியின் தந்தை மனம் தளர்ந்தாலும், தன்னை திடமாக்கி கூற, அவனது தாயார் ஆதி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு வெளியே போட்டிருந்த இருக்கையில் ஓய்ந்துப்போய் அமர்ந்துவிட்டார். அங்கும் இங்கும் ஓடும் செவிலிகளும், மருத்துவர்களும் அவரது கவனத்தில் விழவில்லை.

உண்மையில் அவருக்கு சுப்ரஜாவை பிடிக்காது தான், ஆனால் ஆதி அவளை பற்றி புரிய வைத்தான். அந்த புரிதல் முழுமையாகும் முன்பே காலனது வாயிலை மிதித்துவிட்டாள் சுப்ரஜா.

இப்போதும் சுப்ரஜாவை முதன்முதலில் கண்டது நினைவில் வந்தது. பதின்வயது முடியாத மடந்தையவள். ஆதித்யாவின் கரத்தை இறுகபற்றிக்கொண்டு தான் அவ்வீட்டினுள் வந்தாள். அவன் மீது அத்தனை நம்பிக்கை.

திடீரென பெண்ணோடு வந்த நின்றவனை இருவருமே அதிர்ந்து நோக்கினார். காரணம் அவனது காதல் தோல்வி.

ஆதித்யா தன்னோடு பள்ளியில் பயின்ற ராதாவை காதலித்தான், அவளுக்குமே விருப்பம் தான். 10ஆம் வகுப்பில் தொடங்கிய காதல், பன்னிரெண்டாம் வகுப்பின் முடிவில் முடிந்தது, ராதாவை அவளது தாய் மாமாவிற்கு மணமுடித்துவிட்டனர் கட்டாயமாக.

மற்றவர்களை பொருத்தமட்டில் அது ஈர்ப்பு, வயதுக்கோளாறு என வேறுபடுத்தினாலும், ஆதித்யா அவளை மனதார நேசித்துவிட்டானே. அன்றே முடிவு செய்துவிட்டான் இனி அவனது வாழ்க்கையில் வேறு ஒருத்திக்கு இடமில்லை என.

முதலில் அவனது பெற்றவர்கள் கூட மகன் காலப்போக்கில் மாறிவிடுவான் என விட்டுவிட்டனர். மருத்துவ படிப்பு முடிந்து, மருத்துவனாகியும் விட்டான். மகனுக்கு திருமணம் செய்து முடித்திட நினைத்து, தரகர் தந்து சென்ற பெண்கள் புகைப்படங்களை காட்டினர். அவன் புருவத்தை நெறித்தான். ஓரளவிற்கு அவனுக்கு விஷயம் புரிந்தது என்பதை அவனது விரக்தியான சிரிப்பு கூறியது.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now