8.அத்தியாயம்

81 7 8
                                    

னது ராயல் என்பீல்டில் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தான் ஓம்கார். கல்லூரி விடுதியில் நடந்த பிரச்சனைக்குப்பின், தந்தையிடம் அதனை தெரிவித்தான். கல்லூரிக்கு அருகில் உள்ள ஏரியாவில் தனி வீட்டை பார்த்துக்கொடுத்தவர், "இங்கப்பாருடா! வாழ்க்கைன்னா சில அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சு தான் ஆகனும். எதுக்கெடுத்தாலும் முட்டி மோதிட்டு இருந்தா, இப்டி ஓடி ஓடி வாழ்க்கை தான் போகும்.", என்றார் கடுமையாக.

"அப்பா! பிரச்சனைய நான் ஆரம்பிக்கல, அந்த பொறுக்கிய சும்மாவிட்டதே பெருசு. நீங்க ஏதோ என்னைய குற்றவாளி மாதிரி பேசுறீங்க?", என கொதித்தவன், "நான் யாருக்கும் பயந்து ஓடி இங்க வரல. எனக்கு என் நிம்மதி முக்கியம்.", என காட்டமாக கூறியவன், வீடு பார்த்த தந்த கையோடு தந்தையை ஊருக்கு கிளம்ப கூறினான்.

வீட்டிற்கு செல்லும் முன், சில மளிகை சாமன்கள் வாங்க வேண்டுமென நினைத்தவன், கடைக்கு சென்று ஏற்கனவே மொபைலில் பட்டியிலிட்டிருந்த பொருட்களை வாங்கிக்குவித்தவன், பில் கட்ட வரும்போது அங்கிருந்த சிவாவை கண்டான்.

சிவா ஒருநொடி அதிர்ந்து அவனை நோக்கினாலும் பின்னர் இலகுவாக தனது வேலையை பார்க்க, பொருட்களை அவனிடம் ஒப்படைத்தவன், "இங்கயா பார்ட்-டைம் வேலை செய்ற?", என்றான்.

சிவா ஒரே ஒரு பார்வை அவனை கண்டுவிட்டு அமைதியாக வேலையை தொடர, ஓம்கார் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவனை பொறுத்தமாட்டில் இது மாபெரும் அவமானம் என்பதால் தானாக அமைதியாகவிட்டான்.

சிவாவோடு நடந்த இந்த பிணக்கின் காரணமாக, மகேஷ் ஓம்கார் இருக்கும் திசை பக்கமே வருவதில்லை.

பையை அவனிடம் தந்தவன், அடுத்த நபரை கவனிக்க, சற்று தூரம் தள்ளி வந்த பிறகு ஒருநிமிடம் நின்று நிதானமாக அவனை கண்ட ஓம்கார் தலையை இடவலமாக அசைத்து கிளம்பிவிட்டான்.

இந்நிகழ்வு நடந்து சரியாக ஒருவாரத்தில் மீண்டுமொரு சந்திப்பு ஏற்ப்பட்டது. என்னதான் கல்லூரியில் சந்தித்தாலும் இருவருமே முகத்தை திருப்பிக்கொள்வர் என்பதைவிட சிவா அவனை தவிர்க்கிறான் எனலாம்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Kde žijí příběhy. Začni objevovat