9.அத்தியாயம்

71 7 4
                                    

னது மாலுக்கு வந்த சம்ருதன், கண்கள் எப்போதும் போல் அந்த குறிப்பிட்ட ஆடைகள் தளத்தை கடக்கும் போது கடையை அலசியது. ஏமாற்றம்! அவள் வரவில்லை.

சிறு மூச்சை வாய்வழியாக வெளியிட்டவன், அந்த கடைகளை பார்த்தபடியே தனது அலுவலக அறைக்கு போய்க்கொண்டிருந்த சமயம் அவன் எதிரே கடக்கவிருந்த பெண்ணை மோதுவது போல் தோன்றவும், சுதாரித்த இருவருமே விலகி நிற்க, நிமிர்ந்தவன் கண்களில் நிறைந்தாள் ஈஸ்வரி.

"அதிசயம்!", என முணுமுணுத்தவனை கண்டு, "மன்னிப்பு!", என முறைத்தாள்.

"வாட்?", என அவன் விழிக்க, "வாத்து கோழின்னு! இடிக்க வந்துட்டு பேச்ச பாரு, இதுக்கு தான் இப்டி டிப் டப்பா டிரஸ்ஸிங்கா?", என பொரிந்தாள்.

"எக்ஸ்ட்ரீம்லி சாரிங்க.", என கேட்டதும், அளவான புன்னகையோடு, "அகசப்டட்!", என செல்ல இருந்தவளை தடுத்தான்.

"ஏங்க! என்ன ஞாபகமில்லையா?", அவன் கேட்கவும், அவளது மூளையில் ஏதோ பொறி தட்டியது.

நெற்றியை கீறி, புருவத்தை தேய்த்தவள், "அது நீங்க...?", என இழுக்கும்போதே அவனாகவே அவர்களது முதல் சந்திப்பினை கூறினான்.

"ஞாபகமில்லையா! நீங்க ஹோமுக்கு டிரஸ் வாங்குனீங்க, நான் கூட வேலை ஆள் போல் டிரஸ் வாங்க உங்களுக்கு உதவினேன். அப்றம்...", என தொடங்கி அவன் விலாவாரியாக விளக்கும்போதே, "ஹ... ஹான்...", என நினைவு வந்தவளாக புன்னகைத்தவள், "பெயரென்ன?", என்றாள்.

"சாம் @ சம்ருதன்.", என்றதும், "ஹாய் சாம்! அம் ஈஸ்வரி.", என கை நீட்டினாள். அவனுக்கு உள்ளுக்குள் பனிச்சாரல் வீசியதோ இல்லையோ கைகள் சில்லிட்டது உண்மை. அவளது கையை பற்றி குலுக்கினான்.

அவளை போகவிட மனமின்றி, "வாங்களேன் ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.", என அழைத்தான். அவனை ஒரு நொடி ஆழமாக பார்த்தவள், "ம்ம்... போலாமே.", என ராகமிழுக்க, அவனோ அசடுவழிந்ததை மறைத்தபடி அவளோடு நடந்தான்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now