10.அத்தியாயம்

66 8 2
                                    

ன்றைய தினத்திற்கு பிறகு ஓம்கார் மீது சிறு பிடித்தம் வந்ததாக உணர்ந்தான் சிவா. மற்றவர்களோடு இயல்பாக பேசுபவன், தன்னிடம் காட்டும் அக்கறை கலந்த கடுமை பற்றின சிந்தனை மட்டும் அவ்வப்போது வந்துப்போகுமே தவிர, ஓம்காரோடு நல்லதொரு நட்புறவு ஏற்ப்பட்டிருந்தது. ஒரு வாரம் கடந்திருந்தது.

"ஹே ஓம்! ரைஸ் மட்டும் வச்சிடு, நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.", என சிவா அரக்க பறக்க ஓட,

"ஹான் ஹான்!", என சட்டைக்கு பட்டன்களை அணிவித்தபடி சமையலறை வந்தவன் தயாராகியிருந்த சாம்பரின் வாசனையை ஆழமாக மோப்பம் பிடித்துக்கொண்டு, சிவா கூறிய வேலையை செய்ய ஆரம்பித்தான்.

சிவா குளித்து வந்ததும் வாங்கி வைத்த தோசை மாவில், ஆளுக்கு நான்கு தோசைகளை ஊற்றியபடியே டிபன் பாக்சை கட்ட, ஓம்கார் கூலாக டிவியை பார்த்தபடி தோசையை வயிற்றுக்கு தாரை வாராத்துக்கொண்டிருந்தான். .

அவனோடு சிவா வந்து சாப்பிட அமர, "உன் ஸ்காலர்ஷிப் வந்திடுச்சுடா & உன் தம்பிக்கான படிப்பு செலவு, அதாவது அவன் காலேஜ் முடிக்கிற வரை அவங்களே பாத்துப்பாங்க. உன் அப்பாவுக்கு அடுத்த வாரம் ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சிடலாம்...", என ஓம்கார் கூறிக்கொண்டிருக்க, சிவா சாப்பிடுவதை நிறுத்தியிருந்தான். உண்மையில் அவன் அழுகையை கட்டுப்படுத்துகிறான் எனலாம்.

யாரிந்த ஓம்கார்? பேசிய சொற்ப தருணங்களுமே சண்டையோ வாக்குவாதமோ தான் நடந்திருக்கிறது. அப்படியிருந்தும் தனக்காக இத்தனை செய்கிறானே!

அவன் பணம் படைத்தவனாக இருப்பதை ஒரு காரணமாக கூறினாலும், நல்ல மனம் படைத்தவனே எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இவ்வுதவிகளை செய்ய முடியும்.

அன்று அவன் வாய் வார்த்தைகளாக ஆறுதலாக கூறுகிறான் என்றே நினைத்தான் சிவா. காரணம் வாழ்க்கை அவனை அத்தனை மக்களிடம் ஏமாளியாக நிற்க வைத்திருந்தது.

கவலைப்படாதே, எல்லாம் சரியாகிடும் போன்ற ஆறுதல் வார்த்தைகள் தேடியவனுக்கு, அதைக்கூற விழைந்த ஓம்கார் மீது பெரிதாக எதுவும் தோன்றவில்லை. ஆனால் சொல்லால் சொன்னதை செயலால் கட்டிவிட்டான். சிவா மனதில் சிகரமென உயர்ந்திருந்தான் ஓம்கார்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Donde viven las historias. Descúbrelo ahora