11.அத்தியாயம்

55 8 6
                                    

வெளி நோயாளிகளை சந்தித்துவிட்டு எப்போதும் போல் ஷ்யாமை காண விஜயம் புரிந்தான் சர்வேஷ்.

இப்போது காயங்கள் தழும்பாகியிருந்தது, பெரிய கட்டுக்கள் சற்றே இளைத்து சிறு கட்டுக்களாக மாறியிருக்க, ஆனால் முன்னேற்றம் இல்லாது, படுத்துக்கிடந்தான் ஷ்யாம்.

"ஷ்யாம்! இன்னிக்கி நம்ம மனோஜ் டாக்டர் கூட ஒரே காமெடி. இவர்கிட்ட ட்ரீட்மெண்ட் பாக்க வந்த பேஷன்ட் ஒருத்தரு, 'மெடிக்கல்ல சளிக்கு இந்த மருந்து வாங்கினேன், அடுத்த காய்ச்சலுக்கு அந்த மருந்து வாங்கினேன்' அப்டினு மெடிக்கல்ல வாங்கின மாத்திரை மருந்துகள பத்தி லிஸ்ட் போட்டு சொல்ல, அத கேட்ட மனோஜ் டாக்டருக்கு கடுப்பாகிடுச்சு.

அதுக்கு அவர் சொன்ன பதில் தான் ஹைலைட், 'நீங்க அட்ரஸ் மாத்தி ஹாஸ்ட்டல் வந்துட்டீங்க' அப்டினுட்டாரே!

அதை கேட்டு பேஷன்ட் முழிக்க, 'மக்களுக்கு மருத்துவம் பாக்க தான் மருத்துவர்கள்னு நாங்க இருக்கோம். நீங்க மருந்து வாங்குற கடைக்காரர் எம்பிபிஎஸ் படிச்ச டாக்டர் இல்ல. கடைக்கு வந்தா மருந்து தரது தான் அவரோட வேலை, என்ன மருந்து தரணும்னு முடிவு சொல்றது எங்களோட வேலை.' அப்டினு சட்டமா பேசினதும், அப்போசீட் பார்ட்டி கப் சிப் ஆகிட்டாரு.", என வெடித்து சிரித்தான் சர்வேஷ்.

ஷ்யாமிடம் அசைவில்லை என தெரிந்தும் இது போல் எதையாவது பேசி அவனை உயிர்ப்போடு வைக்க முயல்கிறான்.

"நீயே சொல்லுடா! இப்டி மெடிக்கல்ஸ்ல மருந்து வாங்குறது எவ்ளோ அபத்தம் தான? ஒரு அவசரம்னா ஓகே. ஆனா எப்பவுமே இந்த மாதிரி இருக்குறவங்கள என்கரேஜ் செய்யக்கூடாது இல்லையா?", என பேசிக்கொண்டிருந்தவன் கதவு திறக்கும் ஓசை கேட்டு திரும்ப, அவனது தந்தை கண்ணன் அவ்வறைக்குள் பிரவேசித்தார்.

"டாடி!", என்றபடி எழுந்தவனருகே வந்தவர், "எனி இம்ப்ரூவ்மெண்ட்ஸ்?", என ஷ்யாமை குறிப்பிட்டு கேட்டார்.

"இப்போதைக்கு இல்ல! ஆனா ஒருநாள் வருவான்.", என நம்பிக்கையோடு புன்னகைத்தான்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now