12.அத்தியாயம்

58 7 21
                                    

னது ஷூவை கால்களில் அணிவித்து நிமிர்ந்தாள் ஈஸ்வரி, அணிந்திருந்த கோட் சூட்டை ஒருமுறை சரி செய்து கண்ணாடி முன் நின்று, தனது தோற்றத்தை கண்களில் மிக அழுத்தமான, ஆனால் நுணுக்கமான உணர்வோடு பார்க்கும்போதே, நமஸ் குரல் அந்த பெரிய கூடத்திலிருந்து அறை வரை கேட்க, தனது கூந்தலை மெஸ்ஸி பன்னாக அடக்கிவிட்டு, கம்பீரமாக இறங்கும் ஈஸ்வரியை வாயை பிளந்து பார்த்தான் நமஸ்.

அவன் என்றுமே அவளை ரசிக்க தவறியதில்லை, அந்த தோற்றமோ, கம்பீரமா, பேச்சோ, செயலோ... அனைவரையுமே ஈர்ததிடும் வல்லமை அவளிடம் உண்டு... சில மாத காலங்கள் அத சூரியனை கண்ட பனியாக மறைந்திருந்தாலும், இப்போது அவளது அதே குணம் பிரதிபலித்தது.

படிகளில் இறங்கி வந்தவள், அதே மிடுக்கோடு, "போலாமா நமஸ்?", என கூலர்ஸை கண்களுக்கு கவசமாக அணியப்போக, அவளது கைப்பிடித்து தடுத்தவன், "சாப்பிடனும்.", என்றபடி உணவு மேஜைக்கு அழைத்து வர, இருவரும் அமர்ந்ததும், வேலையாள் உணவை பரிமாறினார்.

அவர் சென்றதும், நமஸை முறைத்தாள்.

"என்ன?", என புருவமுயர்த்தினான்.

அவன் தோளிலே வலிக்காதவாறு அடித்தவள், "கொஞ்சம் பில் டப் பண்ணி, ஸ்டைலா கண்ணாடி போட்டு கிளம்பலாம்னு பாத்தா, இப்டி என்ன உட்காரவச்சிட்டீங்களே நமஸ்!", என்றாள்.

அதில் வாய்விட்டு சிரித்தவன், "உங்களுக்கு தான் ப்ரேக் பாஸ்ட் ஸ்கிப் செய்றது பிடிக்காதே.", என கோடிட்டு காட்ட, அவள் இதழை வளைத்துவிட்டு உணவை உண்ண ஆரம்பிக்க, நமஸ் கவனம் அவள் மீதே இருந்தது.

ஆனால் அந்த உச்சி கொண்டை அவனுக்கு பிடிக்கவில்லை, "எதுக்கு இப்டி ஜிலேபி கொண்டை போட்டு வச்சிருக்கீங்க. மீட்டிங்ன்னா ப்ரீ ஹேர் தான் உங்களுக்கு நல்லாயிருக்கும்.", என்று தனது கருத்தை தயக்கமின்றி பதிவு செய்தான்.

"நமஸ்!", என அவனை தன்னருகே குனியும்படி செய்கை செய்தவள், "ஒரு புது முயற்சி, புது பாதை, புது வாழ்க்கை... சோ புது ஹேர் ஸ்டைல்.", என அன்று கூறியது போலவே இன்றும் கூறி அழகாக கண் சிமிட்டினாள்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now