13.அத்தியாயம்

59 7 10
                                    

ல்லூரி முதல் நாளிலே ஓம்கார் மற்றும் பிரகாஷ் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவாகியிருக்க காரணம் இருவரும் ஒரே விடுதி அறை, இதனால் நன்கு நெருங்கிவிட்டனர். வெவ்வேறு துறை ஆயினும், நட்பு மலர்ந்தது.

பிரகாஷ் மிகுந்த வெளிப்படையானவன். ஒரே நாளில் அவனது ஊரில் பிரபலமான கடைகள் தொடங்கி, அவனது மாமன் மகள் மீது வைத்துள்ள ஒரு தலை காதல் வரை ஓம்கார் காதை தான் சில காலம் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல் உரிமையாக கூறிவிட்டிருந்தான்.

அவன் அளவிற்கு ஓம் திறந்த புத்தகமல்ல. அளவுக்கு மீறின புன்னகை கூட அவனிடம் தோன்றாது, எனில் விலாவாரியாக பேசிவிடுவானா என்ன!

இவ்வாறான இருவேறு துருவங்களையும் நட்பிற்குள் இணைத்தது அந்த கல்லூரி.

ருவாரம் கடந்த நிலையில், பிரகாஷ் உடல் நிலை அன்று சரியில்லாமல் போயிற்று. புதிய இடமும், உணவும் அவனுக்கு உவ்வாமை ஏற்படுத்த, விடுமுறை எடுத்து படுத்துவிட்டான். ஓம்கார் அவனை தொந்தரவு செய்யாது வகுப்புகள் முடித்து மாலை வரும்போது, அறையில் பிரகாஷ் இல்லை.

அதை பெரிதாக எண்ணும் எண்ணமின்றி தனது வேலையில் கவனம் பதித்தான். பாடத்திற்கான குறிப்புகளைை எடுத்துக்கொண்டிருக்க, பலத்த ஓதையோடு கதவு திறக்க, பிரகாஷ் சில மாணவர்களோடு உள்ளே நுழைந்தான்.

ஓம்கார் அவர்களை ஆராய்ச்சியோடு பார்க்க, "மச்சான்! இவங்களாம் நம்ம சீனியர்ஸ்டா... இப்போ நமக்கும் ப்ரெண்ட்ஸ்!", என பிரகாஷ் அறிமுகப்படலத்தை துவங்க, ஓம்கார் புன்னகைத்தாலும், அவர்கள் மீது அவனுக்கு துளியும் பிடித்தமில்லை.

அவர்கள் கிளம்பவும், ஓம் தனது வேலையை தொடர, பிரகாஷ் சிரிப்போடு, "மதிய சாப்பாட்டுக்கு போகும்போது தான் இவங்கள பாத்தேன்டா. ரொம்ப ஜாலியான டைப் எல்லாரும்... எனக்கு உடம்பு சரியில்லாம போனதையே மறந்துட்டேனா பாரேன், ரொம்ப நல்ல அண்ணாஸ்.", என புகழ, ஓம்கார் கேட்டாலும் பதில் கூறவில்லை.

இந்த ஒரு வாரத்தில் குறைந்தது ஐம்பது பேரையாவது தனது நண்பன் என அறிமுகப்படுத்தியிருப்பான் பிரகாஷ். அவனது பேச்சு திறமை அப்படி. அதனால் ஓம்கார் இதை எளிதாக எடுத்துக்கொள்ள, ஆனால் வினையே அப்போது தான் துவங்கியது.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now