14.அத்தியாயம்

82 6 6
                                    

ரு பிள்ளைகளையும் கட்டிலில் படுக்க வைத்து, அவர்கள் உறங்கும் அழகை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதி.

மூன்று மாத குழந்தைகள் இரண்டும் ரோஜா மலர்க்குவியலாக இருந்தனர். குட்டி நட்சத்திரங்கள் யாவும் ஒன்று சேர்ந்த உருவமாக தெரிந்தனர். பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.

அவர்களை ரசித்த ஆதியின் கண்கள் ஒரு ஓரத்தில் கசியவும் செய்தது. தூரலாக ஆரம்பித்த கண்ணீர், அடை மழைப்போல் தாரை தாரையாக கொட்ட, இடியும் மின்னலுமாக கதற ஆரம்பித்தான்.

சுப்ரஜா இறந்திருக்கூடாது என்பதே அவனுக்குள் ஓடியது.

குழந்தைகளுக்கு பால் கலந்து பாட்டிலில் அடைத்து எடுத்து வந்த ஆதியின் தாயார் அவனது அழுகை கண்டு திகைத்துவிட்டார்.

ருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிற்பாடு, ஆதி தனது மருத்துவ வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் குழந்தைகளுக்காக தனது நாளை செலவிட்டான். அவனது அன்னைக்கு கூட வேலை வைக்காது, எல்லாமே தானே செய்தான். ஒரு தாயாகவே மாறிவிட்டிருந்தான்.

அது சுப்ரஜாவாலா? இல்லை 'அவள்' மேல கொண்ட காதலாலா எனக்கேட்டால், அவனிடம் பதில் இல்லை.

அவனது உடலில் தெரியும் பகட்டும், கம்பீரமும்,
கண்களில் கலந்த அலட்சிமும், கர்வமும்,
பேச்சில் தெறிக்கும் திமிரும், புன்னகையும்,
மனதில் இருக்கும் விவேகமும், நிம்மதியும்...
தற்போது அவனை ஓரம் தள்ளி ஒதுங்கிவிட்டிருந்தது.

அவனது தாய், தனது மனப்புலம்பல்களை அவனிடமே கொட்டிவிடுவார். ஆனால் ஆதியின் தந்தை மகனை எண்ணி மருக ஆரம்பித்திருந்தார்.

வீடு கலகலப்பாக இல்லாவிட்டாலும், ஒருவித நிம்மதி உணர்வை தரும். சுப்ரஜா வந்தபோது மழையை கண்டு ரசிக்கும் குழந்தைப்போல் கொண்டாடியவர்கள், அவள் விட்டுச்சென்ற வலியில், வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

ஆதி இத்தனை நாள் காற்றில் கூட நனையாத வகையில் தனது கண்ணீரை கட்டுப்படுத்தி வந்தான். ஆனால் இன்று முடியவில்லை. காரணம் சுப்ரஜாவின் பிறந்த தினம் இன்று. இதே நாளில் தான் ஒருவருடம் முன் அவளை கண்டான். அந்நினைவுகள் கண்ணீரை அதிகம் செய்ய, அழுத்தம் தாங்காத அழுதிருந்தான் ஆண்மகன்.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now