15.அத்தியாயம்

65 7 28
                                    

மௌலி பேசியதெல்லாம் கேட்டு திகைப்பின் உச்சத்தில் இருந்தாள் தனு. லேசாக கண்கள் கூட கலங்கிவிட்டது. அவள் கோபம் கூட வந்தது.

பிழையாக புரிந்துக்கொண்டிருக்கிறாள்... மெய் எது, பொய் எது என தெரியாமலே அனைவரையும் தவறாக பார்த்துள்ளாள்.

இத்தனை வருடங்கள் இங்கு வாழ்ந்தும் யாரையும் அவள் நம்பவில்லை, நிச்சயம் இதற்கு ஒரு வகையில் நளன் காரணம்.

அவரது உள்ளங்கையில் முகம் புதைத்தவள், "சாரி தாத்தா.", அச்சமயம் மனதோடு ஒரு யுத்தத்தில் இருந்தாள்.

அவளை நிமிர்ந்து அமர செய்தவர், "என்ன பீலிங்கா? உனக்கு செட் ஆகல!", என அவளது பாணியிலே நக்கலும் அலட்சியமுமாக கூற, தனது மனநிலையை மாற்றத்தான் அவர் அவ்வாறு பேசுகிறார் என உணர்ந்து, "லைட்டா!", என சிரித்தாள்.

அதில் பக்கென சிரித்தவராக, "இங்கப்பாரு நீ முதன்முதலா என்கிட்ட கேட்ட விஷயம் இது! அதனால மறுக்க முடியாம சொல்லிட்டேன். இதையே யோசிச்சு குழம்பி உடம்ப கெடுத்துக்காத.", என கண்டிப்பாக கூறியவர், "நீ பேசினதுலயே உனக்கு உங்கப்பன பிடிக்கலைன்னு புரியுது. ஆனா அவன் நல்லவன்ம்மா.", என மகனுக்காக பேசினார்.

"நான் கேட்டத சொன்னதுக்கு தாங்க்ஸ் தாத்தா! ஆனா உங்கப்பையனுக்காக வக்காலத்து வாங்காதீங்க. அவர் மேல எனக்கு கோபம் தான்.", என எழுந்தவள், மீண்டும் அமர்ந்து, "பாட்டி என்கிட்ட பேசுவாங்களா?", என ஆசையாக கேட்டாள்.

அதில் கண்சிமிட்டி புன்னகைத்தவர், "நீயே போய் பேசு.", என்றார்.

"ஐயோ எனக்கு பயமா இருக்கே.", என்றதும் வாய்விட்டு சிரித்தார்.

"என்ன மிஸ்டர்.தாரணி நானே போய் பேசுறேன்.", என வீராப்பாக நடந்தவள், தாரணியின் அறைக் கதவை தட்டப்போய் உடனே கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு, உரிமையோடு உள்ளே செல்ல, அவளை சுவாரஸ்யமாக கண்டார் மௌலி.

"மௌலி!", கணவன் என நினைத்து அரவம் கேட்டு கண்களை திறந்தவர், தனுவை எதிர்ப்பார்க்கவில்லை.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now