17.அத்தியாயம்

64 8 13
                                    

மஸ் மற்றும் சம்ருதன் இரு புறமும் ஒருவரையொருவர் முறைப்பும் அலட்சியமுமாக பார்த்தபடி நின்றிருப்பதை கண்டு திகைத்தாள்.

ஈஸ்வரி வருவதை கண்டதும், நமஸ் அவளருகே செல்ல, தனது பைக்கில் அமர்ந்து அவளை சிறு ஆச்சரிய பார்வையோடு கண்டவன், புன்னகைத்தான். அவளது வருகைக்காக அவன் காத்திருக்கவில்லை என்பதை விரைவிலே புரிந்துக்கொண்டவள், அவனை அமைதியாக பார்த்துவிட்டு நமஸோடு நடக்கும் முன்னே, லில்லி வரவும் இருவரும் அவரோடு பேசினர்.

ஈஸ்வரி சம்ருதனை அடிக்கடி கவனித்தாலும், சம்ருதன் அவளது பார்வையை உணர்ந்தாலும், இருவருமே வெளிக்காட்டவில்லை.

சம்ருதன் யாருக்காக காத்திருந்தானோ, அந்த மாமனிதர் வந்தார். அவனது இல்லத்தின் பக்கத்தில் குடியிருக்கும் தம்பதியின் மகனான விக்கியை அழைத்து வரவே வந்துள்ளான். சம்ருதனை கண்டதும் அவன் புன்னகைத்ததிலே, அவர்களோடு ஒரு நல் உறவும், நம்பகத்தன்மையும் இருப்பதை அறியலாம்.

"அப்பா வரலியா அங்கிள்?", எனும்போது புன்னகை மறைந்தது அந்த பதின் வயதினனுக்கு.

"உன்னவிட அஞ்சு ஆறு வயசு தான்டா பெரியவன். அங்கிளாமா அங்கிள். ஒழுங்கா அண்ணானு கூப்பிடுடா.", என அதட்டியவனாக, "அவருக்கு ஏதோ வேலைமாம், அதான் நான் வந்தேன். ஏன்டா! சைக்கிள்ல ஸ்கூல் போறவன், இந்த க்ளாஸ்க்கும் வந்தா என்ன? துரைய ஒருத்தர் கூப்பிட்டு வரணுமோ? பாவம்டா அந்த மனுஷன்.", என அவனது தந்தைக்காக பேசினான்.

"காலம் கெட்டுப்போச்சு அண்ணோவ்! பசங்களுக்கு கூட பாதுகாப்பு இல்ல, நானோ எங்க வீட்டுக்கு ஒரே ரோஜாப்பூ. அப்போ இந்த ராஜாவ பொத்தி பாதுகாத்து தான வளர்த்தாகனும்.", என்றவன், "ஆமா! எப்பவும் இப்டி அட்வைஸ் போட்டு பிழிமாட்டீங்களே. அதிசயமா என்ன பாசம் பொங்குது?", என நக்கலாக கேட்க,

"ஏறுடா! ஓவரா பேசாத.", என முறைக்கவும், சிறு மிதப்பான பார்வையோடு ஏறியவன், "போலாம் அங்கிள்!", என்றான் வேண்டுமென்றே.

அதில் பைக்கை கீழ போடுவது போல் சம்ருதன் ஆட்டவும், அவனது சட்டை இறுக பற்றியவன், "பயம் காட்டாதீங்கண்ணா.", என்றான் பயத்தோடு.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now