18.அத்தியாயம்

81 6 0
                                    

ரண்டு வாரங்கள் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி கடந்திருந்தது.

மௌலியின் வீட்டில் அனைவரும் கிளம்பியதும், அவரோடு பேச வந்துவிடும் தனு, மதிய உணவையும் அவரோடு எதையாவது பேசியபடி உண்டிருப்பாள். சில நேரம் தானே சமைத்துக்கொள்வாள்.

தாரணியோடு அன்று பேசிய பிறகு, அது குறித்தான முயற்சிகள் கூட எடுக்க தயக்கமாகிவிட, அவர் திசை பக்கமே செல்லமாட்டாள்.

நளன் குறித்து கேள்விக்குறியே. அவளோடு பேசவில்லையே தவிர, அவளுக்கான அனைத்தும் சரிவர செய்தார்.

மீரா அவ்வப்போது அவளிடம் பேச முயல்வது போல் வந்து மீண்டும் போய்விடுவாள். ப்ரணவ் பார்க்கும் போதெல்லாம் தனுவை முறைப்பான். அவள் சிரித்தாலும் சிடுசிடுவென போய்விடுவான்.

தனு எதற்குமே அலட்டிக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவளுக்கு எதன் மீதும் அக்கறை இல்லை. வேளாவேளைக்கு உணவு, பேச்சு துணைக்கு மௌலி, அழகான வீடு, நளனது கடமை கலந்த கவனிப்பு என அவளுக்கு அதுவே போதுமானது என நினைத்துக்கொண்டாள்.

மேலும் இரு வாரங்கள் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி கழிய, அன்றோடு ஒரு மாதம் முடிந்திருந்தது.

ன்று காலையில் விரைவாகவே எழுந்தவள், மீரா வாசலருகே நிற்பதை கண்டதும், ஏதோ உந்துதலில், "ஹாய்!", என்று வந்து நின்றாள்.

மீராவோ இருதலைக்கொள்ளி எறும்பாக இருந்தாள். அவளது மனநிலையை சொல்லில் விளக்கிட முடியாது, வைகுண்டம் போக வண்டி கிடைத்தால் எப்போதோ சென்றிருப்பாள் போலும்!

தனுவை அலட்சியம் செய்ய நினைக்கவில்லை, ஆனால் அவளிடம் பேசவும் தயக்கமும், சோகமும் வந்தது.

அவள் பூஜைக்கு பூக்களை பறிக்க, தனு புருவத்தை கீறினாள்.

"ஏங்க! உங்க கூட எதாவது பிரச்சனை இருக்கா எனக்கு?", என விழித்தாள்.

"அய்யோ! ஏன் எதேதோ பேசுற தனு? அப்டிலாம் இல்ல!", என பதறியதில் வந்த சிரிப்பை அடக்கியவளாக,

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now