21.அத்தியாயம்

58 6 0
                                    

சிவாவின் உர்ரென்ற முகத்தை கண்டு பொங்கிய சிரிப்பை அடக்கியபடி அவன் கண்ணில் படும் வண்ணம் நடந்துக்கொண்டிருந்தான் ஓம்கார்.

சிவா சமையலறையில் இருந்தால், வாசலில் நிற்பான். சோபாவில் இருந்தால் டிவி முன்னே நடப்பான். வெளியே வந்தால், போனை நோண்டுவது போல் பின் வருவான்.

ஒரு கட்டத்தில் கடுப்பாகி, "அடிங்கொய்யாலே!", என அவனை துரத்த ஆரம்பித்தான் சிவா.

"வேணாம்டா!", என சோபாவை ஒரு தாவில் தாவ, சிவாவும் அவ்வாறே குதித்தான்.

படுக்கையறையை பரிதாப நிலையில் தள்ளி, சமையலறை பத்திரங்களை ஆயுதமாக்கி, இறுதியில் மொட்டை மாடிக்கு வந்துவிட்டனர்.

"டேய் டெத் என்ட்ல இருக்கேன்டா!", என மூச்சு வாங்க தளர்வோடு கூறியபடி சுவற்றில் சாய்ந்தான் ஓம்கார்.

"ச்சீ பே!", என சிவா தரையில் அமர்ந்துவிட்டான்.

"டேய் சத்தியமா ஞாபகமில்லடா! சாரி.", என்றாலும் சிரிப்பும் வந்தது.

"சிரிக்காத நாயே!", என கொதித்தான்.

நடந்தது இதுவே! சைதன்யாவோடு வெளியே சென்ற ஓம்கார் எப்போதும் போல் வீட்டை பூட்டிக்கிளம்பிவிட்டான்.

விடுமுறை தினத்தில் ஓம்கார் வீட்டை தாண்டமாட்டான் என்பதால், அன்றென பார்த்து தனது ஸ்பேர் கீயை எடுக்காமல் சிவா வேலைக்கு போய்விட்டு, வீட்டிற்கு வரும்போது வீடு பூட்டியிருக்கவும் கடுப்பாகிவிட்டது. இன்னுமொரு சோதனையாக மொபைல் ஏற்கனவே சார்ஜ் தீர்ந்து அணைந்து போயிருந்தது. அவனது தொலைப்பேசி எண் சரிவர நினைவில்லாததால், பிறரிடம் உதவியும் கேட்க இயலாது வாசற்படியிலே உட்கார்ந்துவிட்டான்.

ஏழு எட்டாகியது, எட்டு ஒன்பதாகியது. ஒன்பது நாற்பதிற்கு ஓம்காரின் பைக் சத்தம் கேட்டது.

ஆனால் அதை உணரும் நிலையில் சிவா இல்லை, வாசலிலே தூங்கிவிட்டிருந்தான்.

அதே சமயம், பக்கத்து வீட்டுக்காரர், தனது செல்லப்பிராணியான ஜெர்மன் ஷப்பர்ட்டோடு வர, திறந்திருந்த கேட் வழியாக நின்றிருந்த ஓம்காரை கண்ட அதுவோ, பழக்கப்பட்ட ஓம்கார் மீது தாவியதென்றால், மறுநொடியே அவனை விடுத்து உறங்கும் சிவாவின் காலை ஜலத்தால் குளிப்பாட்டிவிட்டது.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now