23.அத்தியாயம்

83 7 7
                                    

நான்காம் தினமன்று, ஓம்கார் யோசனையோடு, "சிவா! இங்க உங்களுக்குனு ரிலேட்டிவ்ஸ் கூட பெருசா இல்ல, தம்பியும் சின்ன பையன், சோ நீ அவன நம்மளோட கூட்டிட்டு வந்திடேன். அவனோட படிப்பு என் பொறுப்பு.", என சிவாவை நேர் பார்வை பார்த்து கூறினான்.

சில தினங்களாக இதயத்தில் பாறாங்கல்லை கட்டியது போல், கனத்து போய் சுற்றிக்கொண்டிருப்பவன், ஓம்கார் கூறியதற்கு பதில் அளிக்க தெரியாது விழித்தான்.

"யோசிச்சு சொல்லு சிவா...", எனும்போதே, "இங்க பாருங்க இதுல யோசிக்க எதுவும் இல்ல, எங்கண்ணன் வேணா படிப்புக்காக உங்களோட தங்கலாம். சின்ன வயசுல இருந்து இதே ஊர்ல இருக்குற என்னால, எந்த காரணத்துக்காவும் உங்களோடலாம் வர முடியாது.

நீங்க என் அண்ணனோட நண்பனா இருங்க. ஆனா என் விஷயத்துல தலையிட இதோ இந்த சிவாவுக்கே உரிமையில்லாதபோது, நீங்க யாருங்க?", என கோபமாக கேட்டவனை கண்டு எழுந்த புன்னகையை மறைத்தான்.

ஆரம்பத்தில் சிவாவும் இதே குணாதிசயத்தோடு தானே இருந்தேன். ஓம்காரை ஒதுக்குவதையே பிராதனமாக கருதினான். முடிந்தவரை அவனை ஒதுக்கினான், தூர தள்ளினான். அப்படிபட்டவனின் தம்பி வேறு எப்படி இருப்பான் என எண்ணியவன், "சரி! அப்போ உன் ப்ளான் என்ன?", என ஓம்கார் நிதானமாக கேட்டான்.

"எங்கப்பா இருந்தவரை ஏதோ அண்ணன்னு இவனோட பழகினேன். அந்த மனுஷனே போயிட்டாரு, அதனால நாங்க இனிமேலும் டிராமா போட அவசியமில்ல. என் வாழ்க்கைய எனக்கு பாத்துக்க தெரியும்... யாரோட தயவும் வேண்டாம்.", என தீர்க்கமாக கூறியவனை கண்டு ஆச்சரியம் அடைந்தாலும், அவன் கூறியது திகைப்பை தந்தது.

"என்னடா சொல்றான் இவன்! ஏதோ டிராமா அது இதுனு...", என சிவாவை காண, பெருமூச்சுவிட்டான் சிவா.

"எனக்கும் அவனுக்கும் பெருசா செட் ஆகாதுடா. அப்பா ஒருத்தர்னாலும், அம்மா வேற வேற தான! அதுக்காக எதிரினு சொல்லமுடியாது. பிடிப்பு இருக்கு, ஆனா எங்களுக்குள்ள பிடித்தம் வந்ததில்ல.", என விரக்தியாக சிவா கூறியதில், தம்பி மீது அவனுக்கு மறைக்கப்பட்ட நேசம் இருப்பதை காட்டியது.

⚡மின்னல் பாதி தென்றல் பாதி🍃Where stories live. Discover now