கடந்த காலம்

987 81 39
                                    

சூரியன் தன் வேலையை முடித்துவிட்டு மேகங்களுக்கு நடுவே மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்க மக்களும் அவரவர் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.கார்த்தியும் தன் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.கால்கள்  வீட்டை நோக்கி நடக்க அவன் கண்ணும் கவனமும் தன் கையில் இருந்த மொபைலில் இருந்தது.குனிந்தே வந்தவன் யாரையோ இடித்துவிட மொபைய்ல் கீழே விழுந்தது. "அய்யோ..."என்று பதறி எடுத்து  ஸ்கிராச்சாயிடுச்சா என்று பார்த்தவன் பின், யார் இடித்தது என்று ஸ்லோ மோசனில் திரும்பி  பார்க்க அங்கு ஒரு பாட்டி தான் இவன் இடித்ததில் தள்ளாடி நின்றார்.

(நடு ரோட்லையா நின்னு போஸ்கொடுப்பாங்க..ஓரமா நிக்கிறதில்ல..) என்று முதலில் மனதிற்குள் கடுப்படித்தவன் பின் நகர முடியாமல் அந்த பாட்டி சோர்ந்து நிற்பதை பார்த்ததும் அவன் மனதில் குற்றவுணர்ச்சி படர்ந்தது. 'நாமா தான் ரோட்ட பார்த்து நடந்திருக்கனும்..'என எண்ணினான்.
அவரருகில் சென்று, "ஸாரி பாட்டி பாக்கம வந்துடேன்..தண்ணி வேணுமா.."என கேட்க

"கொஞ்சம் குடுப்பா..நல்லாயிருப்ப.."  என்றார்.
உடனே அருகில் இருந்த டீக்கடையிலிருந்து வாங்கி வந்து தந்தான்.குடித்துவிட்டு நன்றி சொல்லி அந்த பாட்டி நடக்க அவரது முடியாத நிலையை கண்டு கார்த்திக்கு பரிதாபமாக இருந்தது.

"பாட்டி வீடு எங்கே என்று சொல்லுங்க..நானும் கூட வருகிறேன்.."என்று கார்த்தி கூற அவனை அவர் நிமிர்ந்து பார்த்தார்.

"ஏன் அப்படி பார்கிறீங்க..நான் திருடன்லாம் இல்லை.."

"ச்சேசே அப்படிலாம் இல்லப்பா..உன்னை பார்த்தாலே தெரிகிறது.."

"நல்லபுள்ளனா...?"என்று சிரித்து கொண்டே கேட்க "இல்ல நீ அதுக்கெல்லாம் லாய்கில்லையென்று.."என கூறி அவர் நடந்தார்.

"வயசானாலும் நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..."என்று முகத்தை சுளித்து கொண்டு திரும்பினான்.ஆனால் அவனுக்கு ஒருமாதிரி உருத்தளாக இருக்க மீண்டும் பாட்டி பக்கமே திரும்பி நடந்தான்.

 கடந்த காலம்[Kadantha Kaalam]Where stories live. Discover now