என் அன்பு தங்கைக்கு

1.3K 17 49
                                    

எட்டுமாத குழந்தையாக
அம்மாவின் வயிற்றில்
இருந்தபோது ஆரம்பித்த
சண்டை என் தாய் அன்பை
பகிர வந்தவள் அவள்...

#அன்பு_தங்கைக்கு

பிறந்தாள் தேவதையாக !
ஆனால் நான் அறியேன் அவள்
எனக்கு இன்னொரு
தாயாக மாறுவாள் என்று....

#அன்பு_தங்கைக்கு

அவள் அழும்போது
புன்னகை என் முகத்தில்
நான்  அழும்போது
கண்ணீர் துளிகள்
அவள் கண்ணில்....

#அன்பு_தங்கைக்கு

தந்தை முகம் காணும் முன்
என் முகம் கண்டவள் அவள்
என்பதால் என்னை பிரிந்தது
இல்லை....

#அன்பு_தங்கைக்கு

பள்ளி பருவ நாட்கள்
அவளை அழைத்து
சென்றது அழகிய
நினைவுகள்....

#அன்பு_தங்கைக்கு

எனக்காக தன் சேமித்த 5காசு
தரும் அவளின் பாசத்திற்கு
இன்றும் ஈடு இணை இல்லை...

#அன்பு_தங்கைக்கு

அவளுடன் விளையாடிய
தருணங்கள் அனைத்தும்
என்னை தோற்காமல்
பார்த்துக் கொண்டவள்....

#அன்பு_தங்கைக்கு

அவள் பெரிய பொண்ணு
ஆகிய செய்தி கேட்டு
மகிழ்ச்சியும் கண்ணீரும்
கொண்ட நாள்கள் நினைவில்....

#அன்பு_தங்கைக்கு

பெரிய பொண்ணு ஆகிய
அவளின் செயல்கள் அனைத்தும்
என் தாய் போல் மாறியது
கண்டு வியந்தேன்....

#அன்பு_தங்கைக்கு

என்னுடன் இருந்தவள்
என்னை பார்த்து கொள்ளும்
தாயாக என் எதிரே...

#அன்பு_தங்கைக்கு

அவளின் சேமிப்பு
சிக்கனம் சமையல்
இவை அனைத்தும்
கண்டு மகிழந்தேன்
இருந்தும் சமையலை
கிண்டல்அடித்தேன்....

#அன்பு_தங்கைக்கு

அவளின் கையால்
அம்மியில் அவள் அறைந்து
வைக்கும் கொத்தமல்லி துவையலுக்கு
என் அம்மாவின் சமையல்
கூட ஈடாகாது...

#அன்பு_தங்கைக்கு

21 வருடங்கள் என்னுடன்
இருந்தவள் இன்று இன்னொரு வீட்டு பெண்ணாக போகிறாள் எனறு
தெரிந்ததும் கண்கள் ஓரம்
கண்ணீர் துளி எதனால்..

#அன்பு_தங்கைக்கு

திருமணம் மகிழ்ச்சியான
விழா  ஆனால் எனக்கு மட்டும்
என் தங்கை என் வீடு விட்டு செல்லும்
ஒரு நாள்...

#அன்பு_தங்கைக்கு

எதுவாக இருந்தாலும் உன்னிடம்
தான் கேட்பேன் இப்போது யாரிடம்
சண்டையிடுவது யாரை கிண்டல்
செய்வது...யாரு சோறு வைப்பது..

#அன்பு_தங்கைக்கு

தங்கை என்று
சொல்லி தாயாக
வந்தவள்..

தாரமாக இன்னொரு
வீடு செல்ல போகிறாய்..

எவ்வாறு இருக்கப் போகிறது
நீ இல்ல தருணங்கள்..

#அன்பு_தங்கைக்கு

நீ என் குழந்தையாக
பிறக்க வேணாம்...

நான் உன் குழந்தையாக
பிறக்கு ஆசை...

#அன்பு_தங்கைக்கு

இதுவரை எதுவும்
உனக்கென்று செய்ததில்லை
செய்யென்று கேட்டதுமில்லை

திருமணம் விழா அதில்
என்ன செய்வதென்று
எனக்கு தெரியவுமில்லை.

#அன்பு_தங்கைக்கு

அண்ணன் என்ற
உறவுக்கு என்னை
தகுதி அடையச் செய்தவள்

என் #அன்பு_தங்கைக்கு.

பிற பெண்கள் மீது
மதிப்பு வர காரணம்
என் தங்கையும் ஒருவள்...

I miss you sister
தனித்துவன்💞

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 07, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

என் அன்பு தங்கைக்குWhere stories live. Discover now