சமூகத்தில் பா(ர்)வைகள்

165 10 4
                                    


சமூகத்தில் பா(ர்)வைகள்:

பெண் தெய்வம் என கூறிக்கொண்டு களிமண்ணிற்கு மஞ்சள், குங்குமமிட்டு பட்டு உடுத்தி பாலாபிஷேகம் செய்து வழிபடும் அதே வேளையில்

பாலிய பருவ பெண்ணின் பாவாடை கிழிக்கப்படுவதையும், பெண் உறுப்பு சிதைக்கப்படுவதையும் கைகட்டி வேடிக்கை பார்கிறது இச்சமூகம்.

பெண்ணியம் பேசும் ஆசிரியை என்றாலும் அவரிடம் பாடவேளையின் போது இருக்கையில் நெளிவதற்கான காரணத்தை வெளிபடையாக கூற முடியாமல் நடுங்கி தவிக்கிறாள் மங்கை.

ஆனால்! பருவத்தில் ஏற்படும் உருவ மாற்றத்தை - இவள் உடலுறவுக்குத் தகுதி என்று ஒலிப்பெருக்கி இட்டு ஊருக்கு உரைக்கிறது இச்சமூகம்.

நள்ளிரவே கடந்தாலும் எவ்வித கேள்வியும் இன்றி வீட்டிற்குள் வரவேற்று உபசரிக்கிறது ஆடவனை.

அந்தி சாய்ந்து அரைமணி நேரம் கழித்து வீடு செல்ல நேரிட்டாலே
அடுக்கடுக்காய் ஆயிரம் கேள்விகளை முன்வைக்கிறது மங்கையருக்கு மட்டும்.

வயிறிற்காக! ஆடைகள் அவிழ்கப்படுவதை தடுக்க முடியாமல் நிற்கும் பெண்ணிற்கு தாசி, விலைமாது,  நடத்தை கெட்டவள்......... என வரிசையாக புனை பெயரிட்டு அழைக்கிறது.

ஆனால்! காசு கொடுத்து படுக்கை அறையினை பகிர்ந்து கொள்பவனுக்கு ஆண்மகன் என பட்டம் சூட்டி மகிழ்கிறது இச்சமூகம்.

மழலை பருவத்தில் ஆண் மகனை போல்! நிமிர்ந்து நடந்த பெண்ணை பார்த்து ரசித்த இச்சமூகம் - அவள் பூப்பெய்த பின்பு நடை பழக கற்றுக் கொடுக்கிறது இரண்டாம் முறையாக.

கண்ணாடி குடுவைக்குள் அடைக்கப்பட்டிற்கும் மீன்களை போல!

நான்கு பக்கங்களிலும் தடுப்புகளை அமைத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் சென்று வா சுதந்திரத்தோடு என கூறி புன்னகைக்கிறது.

நான்கு பக்கங்களிலும் தடுப்புகளை அமைத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் சென்று வா சுதந்திரத்தோடு என கூறி புன்னகைக்கிறது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


தனது உரிமைகளை கேட்டு குரலை சற்று உயர்தினாலே! அவளின் குரவளையை நெரிக்கத் துடிக்கிறது.

சமூகத்தின் அவலங்களை கிழித்தெறிய எழுதுகோலை கையில் எடுக்கும் பெண்ணிற்கு
திமிர்பிடித்தவள், மரியாதை தெரியாதவள், ஆணவக்காரி என பட்டமளிக்கிறது.

படிப்பு முடிந்து பணி செய்ய அனுமதி கேட்பவளை அடக்கி, ஒடுக்கி அவளுக்கு பரிசாக சமையலறை திறவுகோலை கொடுக்கிறது.

கால் நூற்றாண்டு காலம் வேரூன்றி வளர்ந்த நீண்ட நெடிய மரத்தை தாலி எனும் இரண்டெழுத்துச் சொல் வேரோடு பிடுங்கி வெகுதூரத்திற்கு கூட்டிச் செல்வது மங்கையருக்கு மட்டுமே வாய்த்த வரம்.

கால் நூற்றாண்டு காலம் வேரூன்றி வளர்ந்த நீண்ட நெடிய மரத்தை தாலி எனும் இரண்டெழுத்துச் சொல் வேரோடு பிடுங்கி வெகுதூரத்திற்கு கூட்டிச் செல்வது மங்கையருக்கு மட்டுமே வாய்த்த வரம்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


ஜெயகாந்தனின் யுகசந்தி தைரியத்தை பல யுகங்கள் கடந்தும் இன்னும் கதைகளிலே படித்து கொண்டிருப்பது தான் -இச்சமூகம் பெண்களுக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய சுதந்திரம்.

- மு.ச. செந்தில் குமார்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Dec 04, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

சமூகத்தில் பா(ர்)வைகள்Where stories live. Discover now