நினைவுப் பெட்டகமாய் என் காதல்❤️

106 8 65
                                    

ஆக்ரோசமாய் சப்தம் எழுப்பி மேலே எழும்பி பயம் கொள்ளச் செய்யும் ஆழிஅலை... மழை பொழியும் காரணத்தால் இன்னும் கூட உயரம்  கொண்டு மேல் எழ ... அந்த அலையோசையுடன் அங்கே காற்றின் கோபம் புயலாய் மாறி அங்குள்ள தெண்ணை மரங்களை பேயாட்டம் போடச்செய்து கொண்டிருந்த சமயம்.... அலையோசையோ மழைத்துளியோ புயல்காற்றோ எதுவும் என் கண்ணீருக்கு அணையிட முடியாமல் போனது.....

நான் ஆதிரா!!!! அப்பா அம்மா  என அழகிய குடும்பம் இருந்தும் என் மனதை புரிந்து கொள்ள ஆழில்லாத அபலையாய் சுற்றியவள்.... நட்பென்னும் உறவு என் வாழ்வின் முக்கிய அங்கம் ... அங்கே மட்டுமே என் எண்ணங்கள் புரிந்துகொள்ளபட்டதே அதற்கு காரணம்.

இருந்தும் மனதில் ஓர் வெற்றிடம்... அதை நிறப்ப வந்த ஓர் உறவு "அவன்". எனக்கு அறிமுகம் ஆகும் முன்னே பரிச்சயம் ஆகிப்போனான் ... அவன் என்னிடம் பேசும் முன்னே அவன் குரலில் ஈர்க்கப்பட்டேன் நான்...

எனக்கான ஓர் உறவாய் என் எதிர்பார்ப்பின் மொத்த உருவம் கொண்டு நின்றான் "அவன்". வாய் ஓயாமல் உரையாடும் நான் அவன் குரல் கேட்கும் நொடியினில் மௌனமாகி போவேன்...

முதல்முறை பேசும்போதே அனைவரும் என்னை அழைக்கும் புனைபெயர் கொண்டு அவன் அழைக்க...அவன் குரலில் என் பெயர் அழகாய் தெரிந்தது எனக்கு.

என் கைப்பேசியில் அவன் எண்ணை சேமிக்க பல போராட்டங்கள் நிகழ்த்தினேன்... பலமுறை சேமிக்கப்பட்டு பலமுறை அழிக்கப்பட்டு என அந்த பத்து எண்களும் பாடாதபாடு பட்டது என் கையில் சிக்கிக்கொண்டு.

அவனே என்னிடம் வந்து எதற்கோ பேச அவனை அண்ணன் என அழைக்க தவித்து கொண்டிருக்கையில் அண்ணா என அழைக்காதே என அவன் கூறிய நொடி என் இதழோரம் ஓர் சிறு புன்னகை.

பேச்சுக்கள் எங்கள் இடையில் வளர வளர அவன் மேல் கொண்ட ஈர்ப்பும் வளர்ந்துகொண்டே போக அந்த உணர்வை அவனிடம் வெளிப்படுத்திவிட கூடாதென சிறு பயம் தோன்றியது.

என்ன நினத்தானோ என்னை மணம்புரிகிறாயா என கேட்டேவிட்டான் அவன்... உள்ளுக்குள் மகிழ்ச்சி ஆனால் தாய் தந்தை முகம் முன்னே வர வேண்டாம் என நிராகரித்தேன் மனவலியுடன்...

You've reached the end of published parts.

⏰ Last updated: Sep 23, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நினைவுப் பெட்டகமாய் என் காதல்❤️Where stories live. Discover now