4. தவறை திருத்தினாலும் சுவடுகள் எங்கோ?

890 25 0
                                    

முதலில் இவனைக் கண்டதும் கோபமும் மறுபுறம் பயமும் ஒருசேர அதிகரிக்க நின்றவர்கள் இவன் விளக்கியதும் சற்று தெளிந்ததனர். சிறு காயம் என்றாலும் தவறு பெரிது என்பதால் அவன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டான் இனியன். உடனே பதறி தூக்கியவன் தான் முழுமனதாக மன்னித்து விட்டதை வெளி காட்டினான்.

அவனது பண்பு புரிந்ததால் வீட்டில் ஒருவராய் நினைத்த அவன் தாய் காபி போட்டு வந்து கொடுத்தார். பெரிய வீட்டில் வளர்ந்திருந்தாலும் அந்த சிறு வீட்டின் மனிதர்களை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் இரு தங்கைகளும் தனக்கும் தங்கைகள் போலவே தோன்றியது இனியனக்கு.

ராகவன் தந்தை சிறு விபத்தில் இறந்துவிட மொத்த பொறுப்பையும் அவனது தாயார் ஏற்றுக்கொண்டது தெரிந்தது. நல்ல கல்வி இருப்பினும் வேலை சரியாக கிடைக்காமல் ராகவன் இருப்பதை உணர்ந்து அவனுக்கு தன் கம்பெனியிலேயே வேலை வழங்க உறுதி அளித்தான். அவர்கள் தடுத்தும் கேளாமல் அந்த பணத்தையும் மேலும் உதவி வேண்டுமென்றால் தொடர்புகொள்ள தன் தகவல்களையும் கொடுத்தான்.

அந்த வீட்டை விட்டு வந்த பின்னர் மனம் ஒரு பெரிய பாரத்தை இழந்தது போல லேசானது. அடுத்து தனது அன்னையை நினைத்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறே தன் கம்பெனிக்கு சென்றான். இதையெல்லாம் தாண்டி மனதில் ஏதோ ஒரு தவறு செய்த படபடப்பும் தோன்றியதை யோசித்தபடி காரில் விரைந்தான்.

சென்னை மாநகரம் நிற்கக்கூட நேரமில்லாமல் விரைந்து கொண்டு இருக்கும் மனிதர்களின் நிழற்குடை. தன்  Handbag அய் எடுத்துக்கொண்ட பார்க்கவியும் தான் துணை மேலாளராக பணி புரியும் K.V.P IT Solutions இற்கு cab இல் விரைந்தாள்‌. நல்ல நிலையில் இருந்தாலும் எளிமையாய் இருப்பதையே பெரிதும் விரும்பினாள். அதனாலேயே தன் சித்தப்பாவின் கம்பெனி என்றாலும் அங்கே இருக்கும் cab இலேயே பயணம் செய்வாள்.

தன் திறமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு வருடம் சிறப்பாக பணி புரிந்த இந்த பதவியை பெற்று இருந்தாள். அவளுடைய குணம் அறிந்ததால் அவளது சித்தப்பா கிருஷ்ணாவும் அதை ஆமோதித்தார்.

மனதை தீண்டி செல்லாதேWhere stories live. Discover now