கொய்த அரும்பு

261 22 23
                                    

தாயின் இடம் வந்த
தடம் யேது அறியேன்...?

கழிவுகள் கலைய
இரு
உறுப்பு உண்டு அறிவேன்...

மூச்சடைக்க அழுதால்
பசியாறும் அறிவேன்...

குழல் நெறித்து
துளை கிழித்தால்...!
உன்
பசி தீர்ப்பேன் அறியேன்...?

முகம் அறிந்தவரே...
உன் நிர்வாணத்திலும் எனக்கோ
நாணம் இல்லை...

நானோ...
அரைகுறை ஆடையில்
அங்கம் ஒழித்தவள்...

ஆடவன் என்றாலே
அழைத்து மகிழ்ந்தவள்...

அப்பன் முத்தத்தில்
அரை நாழி சிரித்தவள்...

அரைவயிற்றை நிரப்பிட
அன்னை குரல் கலைத்தவள்...

மார்பகம் தொலைத்ததால்
மங்கையென மறந்தவள்...

மங்கைமணம் யேதென்று
நங்கைகுணம் தொலைத்தவள்...

சிற்றெரும்பு சினத்தோடு
போர் புரிய மறுத்தவள்...

சில்வண்டு வாழ்வினை
சிறிது நேரம் கேட்டவள்...

ஆண் போர்வை கொண்டவரே....

ஏழு நிலைகளில் என் வாழ்வு
அறிவாயோ...

பேதையானவளை மடந்தை என்று நினைத்தாயோ....

என்றாவது ஓர் நாள்
உனக்கும்
பேதையொன்று பிறவாதோ...

கையிடையே  அவளை அணைத்திட
எவ்வுணர்வு உணர்வாயோ...

சமூகத்தில் ஓர் பித்தன்Where stories live. Discover now