ஒரு கவியின் கதை

194 6 0
                                    

வணக்கம் நண்பர்களே ❤


Subscribe செய்துகொள்ளுங்கள் நண்பர்களே..❤
YouTube Channel
GK Novels
https://youtube.com/channel/UCKt76GBvrf0vYgti6ZE65tg

இந்த கவிப் பயணத்திற்கு நல் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்.

1) மாநகரம்

அந்த நகரத்தை நோக்கி செல்லும் போதே நம் கண்களில் படுவது வானுயர்ந்த கட்டிடங்களும், நீண்ட நெடிய பாலங்களும் தான். அங்கே காணப்படும் வாகன நெரிசல்களை வைத்தே நாம் அந்த நகரத்திற்குள் நுழைகிறோம் என்பதை உணர்த்துகிறது. மூட்டை தூக்குபவர்கள் முதல் பிறர் முதுகின் மேல் ஏறி பணம் சம்பாதிப்பவர்கள் வரை அந்த நகரத்தில் இருப்பது அந்த நகரின் தன்மையை நமக்கு பிரதிபலிக்கிறது. பாமர மக்களின் வெள்ளந்தி சிரிப்பும், பணக்காரரின் ஏளனச் சிரிப்பும் ஒருசேர இருப்பது, நன்மையும் தீமையும் என்றுமே அருகருகே தான் இருக்கும் என்பதை நமக்கு உணர்த்தும் வண்ணமாக உள்ளது. வெறும் கை கால்களை வைத்துக்கொண்டு பிழைப்பு தேடி வந்து வேலை கிடைத்து வாழ்பவர்கள் ஏராளம்.

தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரத்தை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இரவல் பெற்று வாழும் ஆண்டி முதல் கை நிறைய சம்பாதிக்கும் அரசன் வரை வாழ ஏற்ற இடமாக சென்னை நகரம் திகழ்கிறது. பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சிறுகுறு தொழில்கள் என சென்னையில் இல்லாத தொழில்களே இல்லை எனலாம். ஓடி உழைக்கும் மக்களுக்கு ஓய்வெடுக்க ஓர் இடம் உண்டு என்றால் அது மெரினா கடற்கரை தான். விடுமுறை நாட்களில் அவ்வளவு கூட்டம் தங்களிம் பொழுதை கழித்துக் கொண்டிருப்பர்.

அப்படிப்பட்ட நகரத்தின் நடுவே ஓர் பெரிய ஐ.டி நிறுவனத்தை நோக்கி அந்த கார் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. அதனுள் நாகரிக உலகின் பிம்பமாக ஒரு பெண் கோர்ட் சூட் அணிந்து கம்பீரமாக அமர்ந்திருந்தாள். பார்ப்பதற்கு 28 வயதுக்கு மிகாமல், அழகாக முகப்பூச்சு செய்து ஒப்பனையாக இருந்தாள். மெதுவாக கார் அந்த நிறுவனத்திற்குள் நுழைந்தது. அவள் இறங்கி அந்த நிறுவனத்திற்குள் பிரவேசித்தாள். அவளைக் கண்டு அனைவரும் "குட் மார்னிங் மதிரா" என அவளுக்கு மரியாதை செலுத்தினர். அவள் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் மதிரா. அவள் முகத்தில் கோபமும், வருத்தமும் இருந்ததை நம்மால் கவனிக்க முடிகிறது.

ஒரு கவியின் கதைWhere stories live. Discover now