9

46 7 2
                                    

விழிமொழி: 9

இமையாவை துள்ள துள்ள தூக்கிவந்தவன் அருகிலிருந்த சோபாவில் அமர வைத்தான்.

இமையா அமர்ந்ததும் கதிர் வளர்த்து வைத்திருந்த முடியை கொத்தாக பிடித்தவள், அவனது பல முடிகளை பிடித்து இழுத்து  பிச்சி, ஹீரோ போல இருந்தவனை காமெடி பீஸ் கணக்காக ஆக்கியிருந்தாள்.

ஒருவழியாக இமையா டையார்ட் ஆகி, அவனது முடியை விட்டவள் சோர்ந்து சோபாவில் அமர, அவளது சோர்வை கண்டு, காலையில் போட்டு வைத்த ஜூஸை கொண்டு வந்து இமையா கைகளில் திணித்தான்.

“மேடம் நல்லா குடிச்சிட்டு தெம்பா அடுத்த ரவுண்டு தாக்குதலுக்கு ரெடி ஆகுங்க” கதிர் உதிர்த்த வார்த்தையை கேட்ட இமையா அதிர்ச்சியில் கண்களை விரித்தாள்.

‘இவன் ஏன் இப்படி இருக்கான், நான் செய்வதற்கும் கத்தி போன்ற வார்த்தை உபயோகிப்பதற்கும் சரிதான் போடி என்று போய் இருக்கலாமே.. இவன் ஜூஸ் போட்டு அவன் தான் குடிக்கனும் நான் படுத்திய பாட்டிற்கு. எனக்கு கொடுத்தது மட்டுமில்லாமல், குடிச்சிட்டு அடுத்து அடிக்க தயாராகு என்று சொல்லும் இவன் மனிதனா? இல்லை மிருகமா? இல்லை அதற்கும் மேலா?’

“ஹலோ இமை குட்டி முதலில் குடி அதுக்கு அப்புறமா யோசிச்சிக்கலாம். குழந்தை முகம் வாடி போயிடுச்சி” சொன்னது மட்டுமில்லாமல்,  இமையாவின் முகத்தில் இருக்கும் வேர்வை துளிகளை துடைத்து விட்டு அருகில் அமர்ந்தான்.

“இமை மா, குடி டா”

“இல்லை கதிர் எனக்கு வேண்டாம். எனக்கு தலை வலிப்பது போலிருக்கு, தூங்கனும் பெட் கிட்ட கொண்டு போய்விடுங்க”

“இமை, என்னடா ஆச்சி! உடம்புக்கு எதாவது சரியில்லையா, டாக்டர் கிட்ட போகலாமா” இமையாவின் தலையை தொட்டுப்பார்க்க,  தலை மட்டும் சூடாக இருந்தது.

‘காய்ச்சல் வந்திருக்குமோ.. வெளி காத்து ஒத்துக்கலையோ?’ யோசனையில் கன்னத்தையும் கழுத்தையும் தொட்டு பார்த்தவனுக்கு, காய்ச்சலில்லை என்று தெரிந்ததும் தான் நிம்மதி  பிறந்தது.

உன் விழிமொழி...நானடி!Where stories live. Discover now