இன்னா மாமு சொல்ற

90 24 10
                                    

🔱யின்...

🥯ஐயர் கடை மசால் வடை..🥯
🌮ஐநா பேட்டை கொத்து பரோட்டா 🌮

🤭token no 5️⃣

நடேசன் : அந்த saree யும் பில் போடுங்க  ப்பா...என்னமா ok வா..

சாமு : ம் நல்லதுங்க...

நடேசன் : சரி இந்தா கார் சாவி நீ கார்ல போய் உக்காரு நான் balance வாங்கிட்டு  வறேன்...இந்தா இந்த saree bag எடுத்துட்டு போ...

சாமு : ம் கொடுங்க

என்று சொன்ன சாமுத்தரிக்கா அவர்கள் கையில் புடவையுடன் வந்தவள் காருக்குள் ஏறி அமர.... சில நொடிகள் கடந்த நிலையில் நடேசன் கடையை விட்டு வெளியே வந்தவர் காரை நோக்கி செல்ல... எதிர் பாரா விதமாக கடையின் வாசலில் இருந்த கட் அவுட் அறுந்து அவர் மீது விழுந்ததை பார்த்த சாமுத்தரிக்கா பதறி போய் காரை விட்டு வெளியே வந்தவள்..

சாமு : ஐயோ ஏங்க.... என்னங்க... யாராவது காப்பாத்துங்க....

என்று அலற... சில பேர் கையில் செல் போனுடன் போட்டோ எடுக்க... பல பேர் இதை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல....

சாமு : ஏங்க....ஐயோ யாராவது காப்பாத்துங்க..ஏங்க கடை காரரே உங்க கடை கட் அவுட் தாங்க கழண்டு விழுந்து இருக்கு என் புருஷனை காப்பாத்துங்க..

என்று சாமுத்தரிக்கா கண்ணீருடன் கத்தி கொண்டு இருந்த சமயம்..முல்லை நந்தவனம் அந்த கட் அவுட் ட்டை தூக்கியவள்... தலையில் அடிப்பட்டு ரத்தக்காயத்துடன் சரிந்து கிடந்த தன் கணவன் சிவாஜி நடேசனை அந்த இடத்தில் இருந்து காப்பாற்றுவதை பார்த்த சாமுத்தரிக்கா அவளை நோக்கி ஓடி வர .......

நந்தினி : ஒய் யாரு இங்க நகருங்க நகருங்க ...இன்னா மனுஷங்க நீங்க இங்க ஒரு மனுஷன் அடிபட்டு இருக்குறான.. நீங்க என்னடானா போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கிறீங்க நகருங்க

சாமு : பாப்பா இவரு என் கணவர் மா

நந்தினி : புருஷன இங்க விட்டுட்டு நீ இன்னா உள்ள சாறி எத்துக்கிட்டு இக்கியா

சாமு : இல்லமா என் புருஷனை காப்பாத்த சொல்லி தான் போராடிகிட்டு இருக்கேன்

😂ஐயர் கடை மசால் வடை❤ஐநா பேட்ட கொத்து பரோட்டா😂km Short Stories Where stories live. Discover now