அத்தியாயம் - 11

1.6K 76 19
                                    

அறையை பூட்டிக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்து கொண்ட யாழ்மொழியால் அவளுக்கு நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. யாரையும் குற்றம் கூறவோ, அவர்கள் மீது கோபப்படுவதோ தவறான காரியமாகப்பட்டது அவளுக்கு. அவளுக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுக்க முழுக்க அவளே பொறுப்பாவாள் என்று நினைத்தாள்.  'நான் பணத்துக்காக அவன் சொன்னதை ஒத்துக்காமல் இருந்திருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை?' என்று இவள் யோசித்து முடிக்கும் முன்பே 

'இல்ல நான் அப்படி யோசிக்க கூடாது.  நான் செய்தது சரிதான்.  ஒரு மகளா இருந்து என் தகப்பனுக்கு செய்யவேண்டிய கடமையைத்தான் நான் செய்திருக்கேன்.  அப்படி என்ன பெரிய பிரச்சனை வந்துவிட்டது எனக்கு.  ஏதாவது தப்பு செய்துட்டு ஜெயிலுக்கு போயிருந்தா கூட குறைஞ்சப்பட்ச தண்டனைன்னு மூணு மாசம் ஜெயிலில் அடைச்சிருக்கத்தானே செய்வாங்க.  அப்படி நினைச்சிக்க வேண்டியதுதானே! இதுவே ஒரு கொலை செய்துட்டேன்னா தூக்குல போட்டிருப்பாங்க.  இதையும் அப்படி நினைச்சிருக்க வேண்டியதுதான். உயிருதானே போயிருக்கும்.  பெத்தவருக்காக இதைகூட செய்யலன்னா நான் என்ன பொண்ணு? இன்னொரு முறை தப்பான முடிவை எடுத்துட்டேன்னு வருத்தப்பட கூடாது. அப்பா நல்லா இருக்காரு, அதுதான் நமக்கு வேணும்.' என்று அவள் தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டு அமர்ந்திருக்க மனம் மீண்டும் சண்டித்தனம் செய்தது.  

அதற்கு காரணத்தை அறிந்த போது 'இன்னும் சரியா கூட அவனின் முகத்தை  பார்க்கல.  அவன் யாரு, எப்படிப்பட்டவன்னு கூட தெரியாது.  அதுக்குள்ள அவனைப்பற்றி எதுக்காக யோசிக்கணும்.  அந்த கிஷோரும் ஒரு உதவி செய்யணுமுன்னுதான் கூட்டிட்டு வந்தான்.  இங்கே வந்து பார்த்த பிறகுதானே தெரிந்தது அது உயிரை கொடுக்குற உதவின்னு.  அதுவும் இலட்ச இலட்சமா பணத்தை வாங்கிட்டுதான்.  ஆனால் இவன் அப்படியும் இல்லையே! ஒரே ஒரு நாள் இராத்திரி நல்லப்படியா பார்த்துகிட்டான்.  பொன் முட்டைவிடுற வாத்தை ஒரேடியா அறுத்துட வேண்டாமுன்னு நினைச்சிருக்கான், அதான் காப்பாற்றி கண்டம் விட்டு கண்டம் கூட்டிட்டு வந்துட்டான்.  இனி என்னை வச்சு என்னவெல்லாம் பண்ண போறானோ! அப்படிப்பட்டவனை நினைச்சி எதுக்காக இந்த மனசு இப்படி நோகுது.  சொந்தக்காரங்களையே நம்ப  முடியாத இந்த காலத்தில் இவன் யாரு நமக்கு?' என்று தனக்கு தானாக சமாதானம் செய்து கொண்டாள் யாழ்மொழி. 

ஜீவன் உருகி நின்றேன் Where stories live. Discover now