21. காதலையும் கடந்த உறவு

88 7 4
                                    

ராகவின் கிண்டலால் அவனை வதனா முறைக்க திரவியம் மௌனம் காத்தான்.

"ஆமா, நான் தான் மறந்துட்டேன். நீ என்கிட்ட சொல்லிருக்கனும்ல‌. உன் ஆள நீயே கூப்டாட்டி கோச்சுக்க மாட்டானா?" என்று அவளிடம் ராகவ் ரகசியமாக மெல்லிய குரலில் கேட்க அதைக் கேட்டு முறைத்தாலும் தானாகவே அவள் கன்னங்கள் சிவந்தன. திரவியத்தை அவள் பார்க்க அவன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

எனவே, அவனிடம் வதனா, "நீங்க என்ன இங்க? யாரோ வெய்ட் பண்றாங்களே. உங்களுக்கு தெரிஞ்சவரா?" என்று சற்று தூரம் நின்று அவனுக்காக காத்திருந்த அந்த பிரமுகரை அவள் சுட்டிக்காட்டி கேட்க அப்போதே திரவியம் அவரை கவனித்தான். தன்னைத் தானே திட்டிக் கொண்டு அவரிடம் சென்று பேசினான். அவனது தடுமாற்றத்தை கண்டவளுக்கு அப்போது தான் அவனிடம் எந்த பதிலும் கூறாதது நினைவில் வந்தது. தவிர அவள் கைபேசியும் செயலழிந்து பழுதுபார்க்கக் கொடுத்தது ஞாபகம் வந்தது.

அவளிடம் ராகவ், "என்னடி ஆச்சு? ஓரே டென்ஷனா இருக்கான். எதாச்சும் ஏடாகூடமா பண்ணிட்டியா?" என்று கேட்டான்.

அதற்கு அவள், "அதெல்லாம் இல்ல. அவர்..ப்ச் இல்ல அது ஒரு விஷயம் நான் அப்றம் சொல்றேன்" என்றாள்.

ஆனால், அவனால் தன் ஆர்வத்தை அடக்க முடியாமல் மீண்டும் மீண்டும் கேட்க அவனுக்கு அவள் கொடுத்த பரிசு முதல் அவன் அவளிடம் கூறியது வரை அனைத்தையும் கூறினாள். அதைக் கேட்டு அவளை கண்கள் விரிய பார்த்தவன், "இப்டிலாம் கூட உனக்கு ஒரு ஸைட் இருக்கா. ஸ்கூல்ல என் பர்த்டேக்கு ட்ரீட் கொடுனு நானே வாய்விட்டு கேட்டப்றோம் அல்பத்தனமா ஒரு பன்னும் அதுமேல ஒரு  பிஸ்கட்டும் வச்சுக் கொடுத்தியே அவளா நீ?" என்று கேட்டான்.

அதற்கு வதனா, "அது ஏதோ அறியா வயசு. காலேஜ்லே உனக்காக சர்ப்ரைஸா கேக்லாம் வெட்டுனேன்ல" என்றாள்.

அதற்கு அவன் நக்கலாக, "எது? என் முன்னாடியே ப்ளான் போட்டு அப்றம் சர்ப்ரைஸ்னு கேக் கட் பண்ணியே. அத சொல்றியா? இதுக்கு ஒரு குரூப் ஆரம்பிச்சு. அதல என்னையும் ஆட் பண்ணி அலப்பரை பண்ணீங்களே அத சொல்றியா?" என்று கேட்டான்.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now