அரன் அறம் காத்தால் 1

121 3 0
                                    


அது ஒரு அடர்ந்த காடு.பல வருடங்களாக மனித நடமாட்டம் இருந்ததற்கான சுவடுகூட இல்லாத இடம் அது.பகலில் கூட உள்ளே நுழைந்தால் வழிதெரியது சுற்றி சுற்றி துளைந்து போக வேண்டியதுதான்.இங்கே காட்டின் மத்தியில் ஒரு பெரிய மரம்.பல வருடங்களுக்கு முன் இடியில் தாக்கபட்டு பாதி எரிந்து மீதி காய்ந்து போன மரம் அது.
முழு பௌர்ணமி நள்ளிரவில் மூச்சு வாங்க நிறைமாத வயிறை பிடித்து கொண்டு இந்த காட்டிற்குள் ஓடி கொண்டு இருந்தாள் ஒரு பெண்.அவள் கட்டி இருந்த புடவை வேர்வெயில் நனைத்து இருந்தது.உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினாள்.இந்த அடர்ந்த காட்டின் படர்ந்த இருள் கூட கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.இந்த காட்டில் எதும் மிருகங்கள் இருந்தாள்??அதை எல்லாம் அவள் யோசிக்கவே இல்லை.மனிதத்தன்மை இல்லாத அரக்க குணம் கொண்ட மனிதர்களை விட விலங்குகள் கொடுமையானவை இல்லை என்றுதான் எண்ணினால்.
காட்டின் மைய பகுதியை அவள் நெருகும் நேரம் அவள் உடல் சோர்வுற துவங்கியது,அவள் கால்கள் செயல் இழந்து கீழ்ழே விழுந்தால். விழுந்த வேகத்தில் அவளால் எழ முடியவில்லை,கற்பம் கொண்ட அவள் உடல் ஒத்துழைக்க வில்லை..ஏதேனும் பிடித்து கொள்ள கிடைக்கிறதா என்று துழாவினாள்.மரம் போல் எதோ தென்பட அதை பிடித்து கொண்டு நகர்ந்து அமர்ந்தாள்.
அவளுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது.நேற்று இரவு சாப்பிட்டது தான்..அவளின் பிள்ளையை காக்கும் ஒரே எண்ணத்துடன் ஓடி கொண்டு இருக்கிறாள்.. வலி அதிகம் ஆகிகொண்டே போனது.காலில் ஏதோ ஈரம் உணர்ந்தால்.பயதில் உற்று பார்த்தாள். அது இரத்தம் தான்.வலி அதிகம் ஆனது இறதபோக்கும் அதிகம் ஆனது.அவள் இரத்தம் அந்த வறண்ட மண்ணை நனைத்து கொண்டு இருந்தது.
செய்வது அறியாமல் வலியில் துடித்தாள்.உடல் மட்டும் அல்ல மனதும் வலித்தது..அவளின் உயிர்.அவளின் காதலின் பரிசு.அவளின் எஞ்சி இருக்கும் ஒரே உறவு.அதுவும் இறந்து கொண்டு இருக்கிறது.
இந்த படர்ந்த பிரபஞ்சத்தில் என்னை காப்பாற்ற யாருமே இல்லையா?என் பிள்ளையை காப்பாற்ற யாருமே இல்லையா?என்று கண்ணீர் விட்டால்.அந்த அடர்ந்த வணமே அமைதியானது போல் இருந்தது.அவள் விசும்பும் சத்தம் மட்டும் எட்டுத்திக்கும் எதிரொலித்தது.இரத்த வாடை காற்றில் கலந்தது.எதேனும் சக்தி ,யாரேனும் ஒருவர் என் பிள்ளையை காப்பாற்றுங்கள்.என் உயிரை எடுத்து கொள்ளுங்கள் என் பிள்ளையை காப்பாற்றுங்கள்.என்று வலியில் கதறினாள்.இரத்தம் அதிகமாக சென்றது,இருட்டின் மாயமோ என்னமோ அவள் படுத்து இருந்த நிலம் எல்லாம் இரத்தத்தின் நிறத்தில் சிவந்து,நிலமே சூடானது போல் இருந்தது..அவள் விதியை நினைத்து அழுதவல் அப்படியே மயக்கத்தில் சரிந்தாள்.அவளின் என்ன ஓட்டம் அவளின் அப்படியே பின்னால் ஓடியது.

அரன் அறம் காத்தால்!!!Where stories live. Discover now