தென்றல் வந்து என்னைத் தொடும் இதுவரை ......

125 11 22
                                    



வாழ்க்கை இன்னும் எத்தனை வலிகளைத் தரப்போகிறதோ அவனுக்குத் தெரியவில்லை.

இளமைப் பருவம்

குறையொன்றும் இருக்கவில்லை.

கல்லூரியில் ஆரம்ப நாட்கள்

இனிமையானது.

அதன்பின்

தடம் மாறியது வாழ்க்கை.

தந்தையின் அவநம்பிக்கை, வெறுப்பு

அன்னையின் அழுகை, கையாலாகத்தனம்

உடன்பிறப்புகளின் ஒட்டாத போக்கு

கைகொடுத்த ஒரே ஒரு உயிர்

புதிய பாதையில் பயணம் தொடங்கியது.

அந்தப்பாதை

சட்டத்தின் கண்ணுக்குப் புறம்பானது என்றாலும்

சத்தியமானது.

அடுத்து நடந்தவை

மனத்திரையில் காட்சிகளாக ஓடின.

கர்மயோகியாக வாழ்த்துவனுக்கு

சத்யசோதனையானது அவளின் குறுக்கீடு.

பெண்மையையும் பெண்களையும் மதிப்பவன் அவன்.

ஆண் என்ற அகந்தை இல்லாதவன்.

அவளுக்குத் தாலி அணிவித்து மனைவியாக்கியது

விதியின் விளையாட்டு.

அவள்

பிறர் துன்பம் பொறுக்காதவள்.

பெண்களின் சிறுமை கண்டு பொங்கி எழுபவள்.

அறிவுபூர்வமாகப் பிரச்சனைகளை அணுகுபவள்.

எளிமையாக வாழத் தெரிந்தவள்.

அன்பானவள்.

நகைச்சுவை உணர்வு மிக்கவள்.

அந்த அற்புதமான பெண்மைக்குகந்த

அன்பான அறிவான பண்புமிக்க ஆண்மகனை விட்டு

தன்னுடன் கொண்டு சேர்த்த

தன் கணநேர அகங்காரத்தை

அவன் நொந்து கொள்ளாத நாளே கிடையாது.

பெண்மைக்கோ அதன் மென்மைக்கோ

தென்றல் வந்து என்னைத் தொடும் இதுவரை ......Where stories live. Discover now