மித்ராவின் பயணம்

8 0 0
                                    

(  note- இது கற்பனை கதையை இதில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையை இதில் கூறியுள்ள அனைத்தும் கற்பனையே)

ஒரு காலைப் பொழுது மித்ரா அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் "அக்கா!"என்று கனத்தக் குரலில் ஓடி வந்தான் தேவா. தேவா மித்ராவுடன் பணிபுரிபவன். மித்ரா மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்துள்ளான். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து ஆசிரமத்தில் வளர்ந்தவனை அன்பும் அரவணைப்பும் கொடுத்து தன் சொந்த  தம்பியை போல் பார்த்துக் கொண்டாள் மித்ரா.

தேவாவின் குரல் கேட்டு சோம்பல் முறித்தபடி எழுந்தாள் மித்ரா."என்னடா?"௭ன்று கொட்டாவி விட்டபடி கேட்டாள் ."அரவிந்த் சார் உன்னைய வேகமாக வர சொன்னாரு" என்று கூறினான் தேவா. "நேத்து நைட்டு ரெண்டு மணிக்கு தானடா வந்தேன். என்ன அதுக்குள்ள கூப்பிடுறாரு ?"."தெரியல, ஏதோ முக்கியமான விஷயம் என்று சொன்னாரு ,சீக்கிரம் கிளம்பு ." சரி! என்று கூறி மித்ரா புறப்பட தயாராகினாள்

              இருவரும் ஒரு பழுது அடைந்த பங்களாக்குள் சென்றனர். அங்கு மித்ரா தன் கைரேகை வைத்தவுடன் லிப்ட் வந்தது அதில் ஏறி இருவரும் அண்டர் கிரவுண்டிற்கு சென்றனர் .லிஃப்ட் கதவு திறந்த போது, பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்த சயின்ஸ் லாபிற்குள் சென்றனர். மித்ரா சென்றவுடன்  அனைவரும், "குட் மார்னிங் மித்ரா! "என்று கூறினர் .
          மித்ரா ,அரவிந்த் சரிடம்" என சீக்கிரம் வர சொன்னிங்க" என்று கேட்டாள். அதற்கு அரவிந்த் சார் "நமது நீண்ட நாள் உழைப்புக்குப் பலன் கிடைச்சிருக்கு. நமது டைம் மெஷின் சக்ஸஸ் ஆகிருச்சு. நாம் அனுப்பி வைத்த எலி ௭ந்த பாதிப்பு இல்லாமல் திருப்பி வந்துருச்சு " என்று கூறியதும் அனைவரும் சந்தோஷத்தில் கத்தினார்கள். ஆனால் என்ன year ku போறது என்பது இன்னும் செட் பண்ணல அதுக்கு இன்னும் டைம் ஆகும் என்று அரவிந்த் சார் கூறினார் .

         அப்போது மித்ரா "நான் ஒரு டைம் போய்ட்டு பாத்துட்டு வரேன்" என்று கூறினாள். உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருச்சா ,அதெல்லாம் வேணாம் இன்னும் மனுஷங்களை வைத்து டெஸ்ட்  பண்ணல என்று அரவிந்த் சார் கூறினார். அதற்கு மித்ரா எப்படியும் ஒரு நாள் டெஸ்ட் பண்ணுவீங்கள அது இன்னைக்கு என்ன வெச்ச டெஸ்ட் பண்ணுங்க என்று சொன்னாள். நீண்ட நேர வாக்குவாதத்தின் இறுதியில் அரவிந்த் சார் ஒப்புக்கொள்ள வைத்தாள் மித்ரா.

அக்காவின் மீது பாசம் கொண்ட தேவா "நானும் உடன் வருவேன் என்று கூறினான்". இருவரும் டைம் மிஷினில் பயணிக்க ஆயத்தமானார்கள் . டைம் மெஷினின் ரூல்ஸை எடுத்துக் கூற ஆரம்பித்தார் அரவிந்த் சார்.

"வாட்ச் மாதிரி இருக்குதுல அதுதான் ரேடார் இது உங்க ரெண்டு பேறு கையிலேயும் கட்டிருவோம். இந்த ரேடார்ல ஒரு சின்ன கேமரா பொறுக்கப்பட்டிருக்கும் .இந்த ரேடார  பிரஸ் பண்ணும் போது எங்களுக்கு சிக்னல் வரும் அந்த சிக்னல வச்சு தான் உங்களை திருப்பியும் இங்க டைம்க்கு கொண்டு வர முடியும் ஒரு போதும் இந்த ரேடார மிஸ் பண்ணிட கூடாது. இரண்டாவது யார்கிட்டயும் பேசக்கூடாது .உங்கள பத்தி யார்கிட்டயும் சொல்லக்கூடாது. நீங்க பண்ற ஒவ்வொரு விஷயமும் ஹிஸ்டரிய மாத்த கூட செய்யலாம் ரொம்ப கவனமா இருக்கணும். "

அனைத்து விதிமுறைகளும் கேட்டுவிட்டு டைம் மிஷினுக்குள் நுழைந்தனர் மித்ராவும் தேவாவும் அப்பொழுது..... 😱

You've reached the end of published parts.

⏰ Last updated: Sep 25, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

௧ாலத்தை தாண்டிய காதல்Where stories live. Discover now