01. முன்னுரை

9 0 0
                                    

"நல்ல செய்தி! வே வூஷான் இறந்து விட்டான்"

புதையல் குழியில் முற்றுகை முடிந்து ஒரு நாள் கூட ஆகவில்லை, செய்தி கலை உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.

சில காலத்திற்கு பெரிய குலங்கள் முதல் எந்த குலத்தையும் சேராதவர்கள் வரை கலைகளை பயிலும் அனைவரும், நான்கு மாபெரும் குலங்களோடு நூற்றுக் கணக்கான சிறிய குலங்களும் சேர்ந்து நடத்திய இந்த முற்றுகை பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

"ஈலிங் தலைவன் இறந்து விட்டானா? யார் கொன்றது?"

"வேறு யார், அவனுடைய சகோதரன் ஜியாங் செங் தான் உலக நன்மைக்காக தன்னுடைய சொந்த உறவு என்றும் பாராமல் ஒரு முடிவு கட்டிவிட்டார். ஜியாங் செங் மாபெரும் குலங்களான ஜூன்மென் ஜியாங் குலம், லான்லிங் ஜின் குலம், குஷு லான் குலம், மற்றும் சிங்ஹே நேய் குலம் ஆகிய நான்கு குலங்களையும் வழி நடத்திச் சென்று புதையல் குழியில் அவனுடைய குகையை அழித்து விட்டார்."

"நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும். அவன் ஒழிந்தது தான் நல்லது!"

"உண்மை தான் ஒழிந்தது நல்லது! இறுதியில் இந்த கொடுமை ஒழிந்து விமோசனம் கிடைத்துவிட்டது."

"ஜுன்மென் ஜியாங் குலம் மட்டும் அவனை தத்தெடுத்து வளர்க்கவில்லை என்றால் இப்பொழுது அவன் வெறும் நாடோடியாக தான் அலைந்திருப்பான். ஜியாங் குலத்தலைவர் அவனை தனது சொந்த மகன் போல வளர்த்தார் இருந்தாலும் அவர்களை ஏமாற்றி ஒட்டுமொத்த கலை உலகத்துக்கும் எதிரியாகி ஜியாங் குலத்தை அவமானப்படுத்தியது மட்டும் இல்லாமல், அவனால் கிட்டத்தட்ட அந்த குலமே அழிந்திருக்கும். அவன் செய்நன்றி மறந்தவன்!"

"ஜியாங் செங் அவனை நீண்ட காலம் வாழ அனுமதித்து விட்டார். நானாக இருந்தால் ஜியாங் குலத்தை ஏமாற்றிய போதே அவனை கத்தியால் குற்றியதோடு நில்லாமல் குலத்தின் சீடர்கள் அனைவரையும் முற்று முழுவதுமாக தடுத்திருப்பேன். அதனால் அவனால் திரும்பவும் பைத்தியக்கார  வேலைகளை செய்திருக்க முடியாது. எதுக்காக சிறு வயது தோழன் என்று தேவையில்லாத அக்கறை காட்ட வேண்டும்?"

ஆன்மாவுக்கு அழிவில்லை Where stories live. Discover now