#36 என் உயிர் மட்டும் போகாமல்

179 23 13
                                    

என் எதிர்பார்ப்புகள்

எதிர்மறையாகிப் போனது..

உன் சத்தியங்கள்

சாத்தியமற்றுப் போனது..

நம் நிஜங்கள்

நிழலாகிப் போனது..

இரவில் கண்ட கனாக்கள்

பகல் கனவாகிப் போனது..

வாழ நிர்பந்தித்த ஆசைகள்

நிராசையாகிப் போனது..

நாம் சேர்த்து வைத்த நினைவுகள்

நம்மை சேர்க்க நினையாமல் போனது..

யாவும் போனது..

உன் ஞாபகங்களில் வாழும்

என் உயிர் மட்டும் போகாமல்..

என் கவிதை கிறுக்கல்கள்Where stories live. Discover now