ஞாபகம் வருதே -1

550 65 24
                                    

தீபிகாவுக்கு மிகவும் டென்ஷனாக இருந்தது.

இன்று அவளை மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள்.

இருபத்துமூன்று வயதான தீபிகாவிற்கு, இன்னும் ஓராண்டாவது திருமணத்தை தள்ளி போட வேண்டுமென்று ஆசை.

எப்படியும் ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு கணவன், வீடு, குழந்தை என்று அவள் வாழ்க்கை இயந்திரத்தனமாக மாற தான் போகிறது. அதனால் இன்னும் சிறிது காலம் திருமணத்தை தள்ளி போடலாம் என்று எண்ணினாள்.

ஆனால் அதற்கு அவள் அப்பா ஒத்துக் கொள்ளவில்லை.

உனக்கும் வயதாகி கொண்டே போகிறது... இன்னும் எத்தனை வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறாய்? அதெல்லாம் முடியாது. இன்று வருகிற மாப்பிள்ளை ரொம்ப நல்ல இடம், நன்றாக படித்து நல்ல வேளையில் இருக்கிறார். அதனால் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்கிற வழியைப் பார். உன்னை விட்டால் ஏதாவது காரணம் சொல்லி தடுத்துக் கொண்டே தான் இருப்பாய் என்று அவள் பேச வாய்ப்பின்றி முடித்து விட்டார்.

அவளை மீறி எதுவும் நடக்காது தான். அவளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு அவள் அப்பா மோசமானவர் இல்லை என்றாலும் ஏனோ அவளுக்கு பயமாக இருந்தது.

ஒரு பக்கம் எரிச்சலாகவும் இருந்தது, ச்சே... படித்த பெண் தானே நீ... பெண் பார்க்க வருவதற்கெல்லாம் பயந்து கொண்டு இருக்கின்றாய் என்று அவளை அவளே திட்டிக் கொண்டிருக்கும் பொழுது, வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

அவளின் இதயத்துடிப்பும் அதிகரித்தது, கட்டியிருந்த புடவை நுணியை கைகளில் இறுக பற்றிக் கொண்டாள்.

அவளுடைய அம்மா ரூமிற்குள் வந்து அவள் கைகளில் காபி ட்ரேயை கொடுத்து ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.

யாரையும் நிமிர்ந்து பார்க்க கூட அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தது. குனிந்த தலை நிமிராமல் காபியை கொடுத்தாள்.

சிறுகதைகள் தொகுப்புWhere stories live. Discover now