23.

845 62 30
                                    

"ஆமாம் !"சற்று மென்னையாக பேச ஆரம்பிக்கிறான் "உன்னை,இதோ இவனை (vp யை கை காண்பித்த படி ),அப்புறம் என் தாயாரை (ரியாவின் அம்மா ),மூவரையும்  கடைசியாக கொல்ல வேண்டுமென வைத்திருந்தேன்.முதலில் உன்னை கொல்ல திட்டம் தீட்டி,உன் வீட்டிற்கு வந்தேன்.புரியவில்லையா? பிரியங்காவாக வந்தது யாரென நினைக்கிறாய் ?"மன்மதனை போல் சிரிக்கிறான்."நான் உன்னை கொல்ல தான் அங்கே வந்தேன்.என் அருகிலிருந்த கத்தியை பார்த்திருப்பாய் என நம்புகிறேன்.உன்னை பார்த்த அடுத்த கனமே,பொய்யான காதலை கொண்ட அந்த இருதயத்தை,கத்தியால் குத்த முடிவெடுத்திருந்தேன்.ஆனால்,என்னமோ தெரியவில்லை ,உன்னை பார்த்த பொழுது.....அந்த உண்மையான அந்த கண்களை பார்த்த பொழுது,எனக்கு..........."வார்த்தைகளை தேடுகிறான்"உன்னை தீண்ட எனக்கு மனம் வரவில்லை.நீ காதம்பரியைப் போல் அல்ல.அவள்,பொய்யாவள்,கேவலம்,அசிங்கம்.நீ உண்மை,தெய்வீகம்,சாந்தம்.உன் கண்களில் உண்மை ஒளிர்ந்தது.உன் சொற்களில் அக்கறை ஒழிந்திருந்தது.நீ என்னை அணைத்த பொழுது,உன் ஸ்பரிசம்..........அது தந்த அரவணைப்பு வேரெதுவும் எனக்கு தந்ததில்லை.நீ அன்பாய் கொடுத்த அந்த உணவில் ,அமிர்தத்தின் சாயல் தெரிந்தது.என் வாழ்வில்,நான் எதற்காக எல்லாம் ஏங்கினேனோ,அதை நீ 15 நிமிடங்களிலே தந்து விட்டாய்.வெளிபடையாய் சொல்ல வேண்டுமென்றால்,என்னுள் எனக்கே தெரியாமல் இருந்த மனிதத்தை எனக்கு வெளிச்சம் போட்டு காட்டியவள் நீ ."

ரியாவிற்கு அந்த சொற்கள் அனைத்தும்,அருவருப்பாய் இருந்தது.கண்கள் கடலாயின.

"என்னோடு வந்துவிடு.நாம் வாழலாம்.யாரும் வேண்டாம்.எதுவும் வேண்டாம்.நீ...நான்...மட்டும் வாழலாம்.தயவுசெய்து...இதோ இவனை விட்டு விலகு (vpயை காட்டியபடி ).காதம்பரி ஏமாற்றியது போல்,நீயும் என்னை ஏமாற்றி விடாதே."உடைந்த குரலில்,பரிதாபமாய் பேசினான்.

ரியாவிற்கு இது உபயோகரமாக தோன்றியது.கண்களை துடைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.பெருமூச்சு விட்ட படி,"சரி...நான் உன் கூட வாழ தயார்.உன் கூடவே வந்திருறேன்.ஆனா,எனக்கு நீ ஒரு சத்தியம் பண்ணி கொடுகனும் "

மரணமா ? மர்மமா ?Where stories live. Discover now