தீவிரவாதியின் மகள்

44 2 1
                                    

யாகூபின் மகள்..

தூக்கிலடப்பட்ட யாகூப் மேமனின் மகள் ஜிபைதா மேமனின் பார்வையில் ஓர் மடல்...

இன்றுடன் எனது தந்தை மரணமடைந்து மூன்று வருடம் முடிவடைகிறது.. வழக்கம் போல்  பொழுது தூக்கத்தையும் துக்கத்தையும் கடந்து இயல்பான தினசரி வேளைகளில் நாட்கள் செல்கின்றன. காலங்கள் கடந்தாலும் மனதை இருகச் செய்து வாழ்க்கையை எதிர் நோக்கினாலும் என் தந்தையின் கடைசி நிமிட வார்த்தைகள் மனதை வதைக்கின்ரன. தனிமையை சந்திக்கும் தருணம்   என்னை தொட்டு தூக்கி கொஞ்சாத தந்தையின் இழப்பு என்னை சுற்றி நிழலாடுகிரது..

கூட்டு மனசாட்சிக்கு பகரமாக என் தந்தையை பலி கொடுத்த ஜனநாயக நாட்டின் பிற்படுத்தப்பட்ட சமூக பிரதிநிதியாக எதிர்காலத்தை எதிர்கொள்ள முயல்கிறேன்.

இந்த நடுநிலை சமூகம் அனுதாபத்தையும் எதிர்ப்பையும் என் தந்தைக்கு வழங்கிய நாட்கள் கடந்து அடுத்த கட்ட பிரச்சினைகளுக்கு கருத்து தெரிவிக்க சென்று விட்டன. ஆனால் தீவிரவாதியின் மகளாக முத்திரை குத்தப்பட்ட என் மீதான சமூகத்தின் பார்வை என்னை தேசத் துரோகியாகவே அவர்களுக்கு காட்டுவதேகவே எனக்கு தோன்றுகிறது.. என்னை கடந்து செல்லும் பள்ளி நண்பர்களும்    என் வீட்டைக் காண கூடிய மக்களும் தெருவில் என்னை கடந்து செல்லும் மனிதர்களும்  அவர்களுக்குள் பேசும் போது என்னையும்  என் சமூகத்தையும் சந்தேகிப்பதாகேவே தோன்றுகிறது. அடையாளம் காட்ட என் தந்தையின் பெயரையும் புகைப்படத்தையும் காட்ட வேண்டிய தருணங்களில் அவரின் அடையாளத்தை மறைக்க மனம் முயல்கிறது. அந்த சமயங்களில் தவறு ஏதும் செய்யாத என் தந்தையை நானே தீவிரவாதியாக்குவது போல் குற்ற உணர்வு. வாழ்வினில் ஒவ்வொரு நிகழ்வையும் பெற்றோருக்கு பெருமை சேர்க்க விரும்பிய நான் இன்று பெற்ற தந்தையின் அடையாளத்தை மறைத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். மதம் சார்ந்த அரசியல் தனிமனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு தீவிரமானது. அதற்கு கூட்டு மனசாட்சிக்கு பலியிடப்பட்ட என் தந்தை மட்டுமின்றி அவர் சார்ந்த என் குடும்பமும் உதாரணம். மதச்சார்பற்ற நாடு என மார்தட்டி கொள்ளும் என் இந்தியாவும் அதன் கைப்பாவையான நீதித்துறையும் களையப்பட வேண்டிய நிலைமையில் உள்ளது.. பலியிடுங்கள் உங்கள் திருப்திக்காக.. ஆனால் எங்கள் நாட்டுப்பற்று மீது கரையை ஏற்படுத்தாதீர். இது என்னுடைய வலி மட்டுமின்றி என்னை போல்  ஆயிரக்கணக்கான தந்தையின் முகம் அறியாத ஸ்பரிசத்தை உணராத தகப்பனின் பெயரை வெளியே கூற முடியாத நிலைக்கு இந்த ஜனநாயக இந்தியாவால் தள்ளப்பட்ட குழந்தைகளின் கண்ணீர். சந்திப்போம் சமூகத்தை இறைவன் மீதான நம்பிக்கையுடன்.. :)

ஜனநாயகத்தை நம்பிய என் தந்தைக்கு சமர்ப்பணம்..

You've reached the end of published parts.

⏰ Last updated: Jul 18, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

எண்ணங்களின் தொகுப்பு..Where stories live. Discover now