நான்...

399 31 71
                                    

முதலில் என்னை பற்றி சொல்கிறேன். பிறகு அவளை பற்றி சொல்கிறேன்.

நான் ஜெகன்... ஜெகன்நாத்... ஜெகன்நாத் அழகேந்திரன்... பொறியியல் பட்டதாரி. பள்ளிப்பருவம் வரையில் மிகுதியான நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளாத சிலரில் நானும் ஒருவன். எனக்கு நண்பர்கள் எண்ணிக்கை குறைவு என்பதை விட நான் இன்னும் என் நண்பர்கள் கணக்கை தொடங்கவில்லை என்பதே உண்மை.

கல்லூரியிலும் என் நாட்கள் அப்படியே சென்றன. அவளை பார்க்கும் வரையில். அவளுடன் பேசும் வரையில். அவளுடன் பழகும் வரையில். அவளை காதலிக்கும் வரையில். அவள் என் தோள்களில் சாயும் வரையில். அவள் என் கைகளை பிடித்து நடக்கும் வரையில். அவள் என்னை கண்ணீரில் மிதக்க விடும் வரையில். அவள் என்னை பிரியும் வரையில்.

அவளுடனான என் காதல் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஏன் பிரிந்து சென்றாள் என்று கூட தெரியாமல் பல நாட்கள் தனிமையில் ஆறுதலுக்காக ஏங்கிக்கிடந்தேன். அன்று தான் எனக்கு நண்பர்கள் இல்லை என்ற வருத்தம் முதன்முதலில் தோன்றியது.

'நான் எந்த தப்பும் பண்ணல... அவ தான் என்ன விட்டு போனா... நான் ஏன் வருத்தப்படணும்??? எனக்கு யாரு முக்கியத்துவம் குடுக்குறாங்களோ அவங்களுக்கு தான் நான் முக்கியத்துவம் குடுக்கணும்... இனிமே அவள நெனச்சுக்கூட பாக்ககூடாது... யாரையும் காயப்படுத்தக்கூடாது... முடிஞ்ச வரைக்கும் என்ன சுத்தி இருக்க எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கணும்... நான் கஷ்டப்பட்டாலும் என்ன சுத்தி இருக்கவங்க கஷ்டப்பட கூடாது...", என்ற முடிவுக்கு வந்தேன்.

அன்று ஆரம்பித்தது தான் இந்த பிரேக்-அப் பார்ட்டி... முதன்முதலில் தனியாகவே என் பிரேக்-அப் பார்ட்டியை கொண்டாடினேன். என் 2வது வருடக் கொண்டாட்டத்தின்போது தான் அவளை பார்த்தேன். என் முன்னாள் காதலியை அல்ல... பப்லிமாஸை...

இதோ அவளை எப்படி சந்தித்தேன், அவள் யார் என்பதை சொல்கிறேன் அதையும் கேளுங்கள்...

முன்பே வா...!Where stories live. Discover now