5. யாருக்கு யார் சொந்தம்

2.4K 80 7
                                    

அன்று ஞாயிறு...அது அந்த சம்பவத்திற்கு பின் நாலாவது நாள். காலை உணவை முடித்தபின் அன்று ஓய்வு நாள் என்பதால் சில பொருள்கள் வாங்கவென்று பிரபல மால் ஒன்றிற்கு சென்றான் சித்ரஞ்சன். வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டு ஒரு கடையிலிருந்து வெளியேறும் போது, அந்த "அவள்" உள்ளே நுழைந்தாள். அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

பதிலாக புன்னகைத்து, "ஹாய் மா ! எப்படி இருக்கே? காயம் நல்லா ஆறிடுச்சா?" என்று நலம் விசாரித்தான்."
"ஆமா, போயே போச்சு" என்று புன்னகைத்தாள்.
"நீ தனியாவா வந்திருக்கே??"என்று பேச்சை வளர்த்தான் சித்ரஞ்சன். அவனுக்கு வந்த வேலை முடிந்துவிட்ட போதும் அவளை விட்டு உடனே விலக மனம் வரவில்லை.

"இல்லை என் பிரண்ட் வர்றேன்னு சொல்லிருக்காங்க, அதுவரைக்கும் ஜஸ்ட் வின்டோ ஷாப்பிங் பண்ணலாம்னு இந்தப் பக்கமாக வந்தேன். நீங்கள் முடித்துவிட்டீர்களா? அவள் மிக நிதானமாக பேசினாள்.

அவளுடன் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க விரும்பி, "எனக்கு தெரிந்த கல்லூரி மாணவிக்கு சில பரிசு பொருள் வாங்கித் தரவேணும். ஆனால் அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று என்னால் கணிக்கமுடியவில்லை. உனக்கு அவகாசம் இருந்தால் கொஞ்சம் உதவ முடியுமா? சிரமம் என்றால் பரவாயில்லை நான் கடைக்காரர் உதவியுடன் வாங்கிக் கொள்கிறேன்" என்று அவன் சொல்ல..

ஒருகணம் யோசித்துவிட்டு, "சரி என்னோடு வாருங்கள்" என்று அவள் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் இருந்த கடைக்குள் நுழைந்தாள்.

சித்ரஞ்சன் உள்ளூர புன்னகைத்தவாறே அவளை பின் தொடர்ந்தான். அவள் காட்டிய சிலவற்றை என்னவென்றே கவனிக்காமல், விலை பாராமல் வாங்கிக் கொண்டான். அவளுக்கு கொஞ்சம் பிரமிப்பு தான்! ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை
.

அவனோ இறுதியில் "நான் நண்பன் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். அதனால இதை எல்லாம் அங்கே கொண்டு செல்ல முடியாது, உன்னிடமே வைத்துக் கொள். நான் ஊருக்கு செல்லுமுன்னதாக வாங்கிக்கொள்கிறேன்,"என்று சித்ரஞ்சன் சொல்ல, அவள் ஒருகணம் திகைத்துவிட்டு, உடனேயே சினம் துளிர்க்க,

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Where stories live. Discover now