காட்சி-2

773 33 9
                                    

சாராவை பின் இருந்து அழைத்தது வேறு யாருமில்லை.அவள் அண்ணன் சாராவின் பெரியம்மா பையன் கார்த்திக் தான்.அதே கல்லூரியில் civil மூன்றாம் ஆண்டு படிக்கிறான்.

சாரா எப்படி இருக்க?
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி அண்ணா இருக்க?
நல்லா இருக்கேன்.சாரி!சாரா மார்னிங் உன்னை பார்க்க முடியல.
அப்போது பேருந்தினுள் இருந்த அவன் கார்த்திக்கை மச்சான் என்று கூப்பிட்டான்.கார்த்திக் அவனை வா மச்சான் இங்க ! என்றான்.
இப்போது சாராவிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தான்.

சாரா இவன் பெயர் லோகேஷ்.நான்காம் ஆண்டு E&I .லோகு இவள் பெயர் சாரா.என் சித்தி பொண்ணு.முதலாம் ஆண்டு ece.பிறகு கார்த்திக் அவன் மற்ற நண்பர்களான வினோதினி,சுமி,லதா,நவின்,கோகுல்,ராம் எல்லோரையும் சாராவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்.சாரா மட்டும் தான் அவள் பேருந்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி.
அவள் எல்லோரையும் அண்ணா,அக்கா என்றே அழைத்தாள்.ஆனால் லோகேஷ் மட்டும் அவளிடம் பேசவில்லை.அவளும் பேச முயற்சி செய்யவில்லை.சாரா இப்போது அந்த கூட்டத்தில் ஒருவராக மாறி போனாள்.அவர்களுடன் ஒன்றாக உணவு உண்பது ,வெளியே செல்வது,அரட்டை அடிப்பது என எல்லாம் செய்தாள்.

அனைவரும் காலையில் ஒன்றாக பேருந்தில் உணவு உண்பது வழக்கம்.லோகேஷ் சாராவிடம் பேசுவதும் இல்லை.அவளிடம் உணவை பகிர்ந்து கொள்வதும் இல்லை.ஒரு நாள் லோகேஷ் உணவு எடுத்து வரவில்லை.எல்லோரும் அவனுக்கு உணவு கொடுத்தார்கள்.சாராவும் இந்தாங்க அண்ணா சாப்பிடுங்க என்று அவள் உணவை கொடுத்தாள்.உடனே அவன் என்னை அண்ணா என்று எல்லாம் அழைக்காதே!என்று மிகவும் கோபமாக கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.அது சாராவிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.அவள் அழுது விட்டாள்.அவளிடம் இதுவரை யாரும் இப்படி பேசியது இல்லை.அவளும் யாரிடமும் இப்படி பேசியது இல்லை.அவள் எல்லோடரிடமும் மிகவும் அன்பாக இருப்பாள்.அவளை ்எல்லோரும் சமாதானம் செய்தார்கள்.அவன் வேறு ஏதொ யோசனையில் இருக்கிறான் அதான் அவன் அப்படி பேசிட்டான் என்றார்கள்.
அவள் வகுப்பறைக்கு சென்றதும் காலையில் நடந்ததை நிவியிடம் கூறினாள்.அவள் வருத்தபடாத எல்லாம் சரியிடும் என்றாள்.
மதியம் நிவியும்,சாராவும் சாப்பிட கேண்டின் சென்றார்கள்.அப்போது ஒரு மரத்தடியில் லோகேஷ் நின்று கொண்டு சாராவையே பார்த்து கொண்டு இருந்தான்.அவள் அவனை
பார்த்தும் பார்க்காதது போல சென்று விட்டாள்.லோகேஷிற்கு இது மிகவும் வருத்தத்தை அளித்தது.அவன் தான் செய்தது தவறு என்று உணர்ந்தான்.

மாலை எல்லோரும் பேருத்திற்கு வந்தார்கள் .சாராவின் முகம் மிகவும் வாடி இருந்தது.அது லோகேஷிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.சாரா அவள் நிறுத்தம் வந்ததும் இறங்க சென்றாள் .அப்போது லோகேஷ் அவளிடம் சாரா ஸாரி! என்றான்.அவள் ஒன்றும் பேசமால் திரும்பி ஒரு புன்னகையாய் மட்டும் உதிர்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

உன்னில் என்னை காண்கிறேன்Where stories live. Discover now