முன் பணியா -16

5.4K 151 7
                                    

இரவையும் பகலையும் மாற்றி விட்டாய்.....
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்...
மூழ்கிறேன் நான் உன் கண்ணிலே...

லிரிக்: பழனி பாரதி.


அன்று நானும் ஹேரியும் லன்ச் நேரம் கேன்டீனில் அமர்ந்து கொண்டிருக்கும்போது அது நடந்தது…

முதலில் எங்களை சுற்றி முணுமுனுப்புகளின் சத்தம் அதிகமானது நானோ யாரது எத்தனை பேரின் கவனத்தை கவர்ந்த நபர் என்ற ஒரு ஆர்வத்தில் வெளியே என்ன நடக்கிறது என்று தலையை திருப்பி பார்த்தேன்…

அருகில் பெண்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து  ஆண்களுக்காக ஒதுக்கும் அந்த ரகசிய முன்னைடையுடன் ஒருவருக்குஒருவர் பேசிக் கொண்டிருந்தனர்….

யார்ரா அது பாதி காலேஜை திரும்பி பார்க்க வைத்தது…

என்ற ஆச்சர்யத்துடன் நான் சுற்றிலும் பார்க்க கூட்டத்திற்கு நடுவில் என்னால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை…

சரி ஹேரிக்கிட்ட யாருன்னு தெரியிதான்னு கேப்போம் என்று நான் அவள் புறம் திரும்ப அவளோ அவள் வாய்க்குள் திணிக்க முடியாத அந்த பெரிய பிஸ்சாவை கஷ்டப்பட்டு திணித்துக்கொண்டு இருந்தாள்…

அவள் வாய் பிஸியா இருக்க்கு நம்மளே தேடிக்கலாம்…

இந்தமுறை நான் திரும்பி பார்த்தபோது முன் இருந்த அந்த மக்கள் கூட்டம் இரண்டாக பிரிந்து யாருக்கோ வழி வகுக்க நானும் ஆச்சர்யத்துடன் யார் என்று பார்த்து கொண்டிருந்தவள் வந்தவனைன் முகத்தை பார்த்து சற்று உறைந்து போனேன்…

Obviously இப்படி போலீஸ் ட்ரெஸ்ஸோட அப்படி ஒரு முகத்தோடு அப்படி ஒருவன் நடந்து வரும்போது பெண்கள் பார்ப்பது இயல்பு தான்…

“ஹேரி” நான் என் தோழியை எச்சரிப்பதற்காக என் முன் வருபவனிடம் இருந்து கண் எடுக்காமல் அவளை அழைத்தேன்…

“மம்ம்ஹ்ஹ்ம்ம்” அவள் வாயில் பிசாவை தீவிரமாய் திணித்து கொண்டு கூறிய எதுவும் எனக்கு புரியவில்லை…

என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)Where stories live. Discover now