நண்பர்கள் தினம்.

205 22 40
                                    

நான் யாரோ நீ யாரோ
என்று இருந்த நம்மை
கட்டிப்போட்டது இறுக்கமாய்
நட்பு எனும் கயிறு

உன் சிரிப்பில் நான் மனம் களிக்க
உன் கண்ணீர் நான் துடைக்க
உனக்காக என்னையும் உனக்காக என்னையும்
தந்தது இப்புனித நட்பல்லவா

தவறின் போது தண்டிக்க
உரிமையோடு கண்டிக்க
தோளோடு கை போட்டு
உறவாட வைத்தது நம் நட்பு

நட்பு இல்லா மனிதனில்லை
நட்பு இல்லாவிட்டால் மனிதனே இல்லை
நாம் கொண்ட நட்பானது
நாளும் நீடிக்க வேண்டுவோம்

கல்லில் செதுக்கிய சிற்பமாய்
என் இதயத்தில ஆழப் பதிந்த
என் இனிய நட்புக்களுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
"இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்"



என் மனத்தே மலரும் மலர்கள் சில மாலையாக..........Tempat cerita menjadi hidup. Temukan sekarang