07

1K 45 13
                                    

நாட்கள் உருண்டோடின. கவி ஆதிராவின் அருகிலே இருந்தான். மகேஷ் கொடுத்த சித்திரவதைகளை எல்லாம் அவளாகவே சமாளித்தாள். முதல் இன்டெர்னல் தேர்வில் ஆதிராவை தோல்வியடையச் செய்தனர். வாழ்வில் முதன்முறையாக தோல்வியை சந்தித்தவள் அதனை பற்றி கவலை கொண்டதாய்த் தெரியவில்லை. சூர்ப்பனகை ராவணனின் வேலையின் ஒரு பகுதியின் விளைவென்றறிந்தவள், கைமீறி போகின்ற காரியத்திற்கு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகின்றது? போகும் வரை போகட்டும் என்ற மனப்பான்மையில் அமைதியைக் கடைபிடித்தாள்.

நாட்கள் செல்லச்செல்ல அவளுக்கு அது பழக்கப்பட்டுவிட்டது போலும். முதலில் நடப்பவைக்கெல்லாம் மௌனமாக இல்லை கோபமாக இருந்தவள், பின் கண்டுகொள்வதில்லை.

அவள் மனவருத்தத்தைப் போக்கவே மூன்று நம்பர்கள் இருந்தார்களே! கவியும், பாவனாவும், மணியும் சேர்ந்து அவளை எப்பேர்ப்பட்ட மனநிலையில் இருந்தும் மாற்றினர்.

இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் ஒரு நாள், துறையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக மாணவிகளை கட்டாயம் சேலை அணியவும் வற்புறுத்தி இருந்ததால், அன்று கவியால் ஆதிராவை சேலை கட்டிப் பார்க்க முடிந்தது.

மெரூன் நிறம். அவள் நிறத்துக்கு பொருத்தமாக இருந்தது. அவள் மாநிறம். ஆனால் அந்த சேலை அவள் நிறத்தை உயர்த்திக் காட்டிற்று. நீளக் கூந்தலில் இருந்த ஒற்றை ரோஜா அவனை கிறங்கடித்தது.

அவன் தன்னை எப்படி எல்லாமோ கட்டுப் படுத்திக் கொள்ள முற்பட்டான். 'தப்பு கவி தப்பு. அவ உன்ன பிரண்டா தான் பாக்குறா. நீ இப்படி எல்லாம் மனச அலைபாய விடக் கூடாது. கண்ட்ரோல்!' உள்ளே சொல்லிக் கொண்டே இருந்தான்.

ஆதிராவுக்கோ சேலை கட்டி அவ்வளவு பழக்கம் இல்லை என்றே தோண்டிற்று. பொம்மை போல ஆடாமல் அசையாமல் நடந்து கொண்டிருந்தாள். அவ்வபோது பாவனாவிடம் சேலையைப் பற்றி புகார் செய்ததும் அவனுக்குக் கேட்டது.

இது அவளிடம் இருக்கும் குறை. சேலையே பெண்ணிற்கு அழகு. ஆனால் ஆதிராவுக்கோ சேலை அணிய துளியும் விருப்பம் இல்லை. அதைச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை.

அழகிய தீயே (Completed)Where stories live. Discover now