பனி விழும் இரவு

1.4K 11 6
                                    

கானல் பனி மெல்லிய அளவில் விழுந்த நேரமது. நடு சாமம் இரண்டு மணி இருக்கும் குளிரில் கடிகார முட்கள் கூட நடுங்கியது அப்போது தான் மதனின் அலைப்பேசி அலறியது. தூக்க கலக்கத்துடன் அலைபேசியை அனைத்தான் மீண்டும் ஒலித்தது இந்தமுறை எடுத்தான். எதிர் அலையில் ஓர் மென்மையான பெண் குரல்.

"மதன் ரெடியா இரு, 5 மணிக்கு நம்ம கிளம்புறோம் சரியா!

நமக்கு தேவையான பணம் எல்லாம் எடுத்துக்கிட்டேன்." என தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உறக்கத்தை கலைத்து மணியை பார்த்தான்‌ இரண்டு ஆறை தழுவி கொண்டிருந்தது. வேகமாக அலைபேசியை பார்த்தான் அப்போது தான் தெரிந்தது அது பிரம்மகலை என்று, மீண்டும் அவளுக்கு அழைத்தான்.

"ஏய் என்னடி சொல்ற அஞ்சு மணிக்கு எங்க போற"

"டேய் ஊர விட்டு ஓடி போக போறோம்ல"

"எதுக்கு..."

"அதலாம் காலையில பேசிக்குவோம்.
நீ அஞ்சு மணிக்கு ரெடியா பி பிளாக் மாடில நில்லு. நானும் வந்துரேன் சேர்ந்து ஓடி போவோம்"

"ஏய் போறது தான் போறோம்!
நல்ல தூங்கி எந்திருச்சிட்டு டிபன் சாப்பிட்டு மெதுவா போவோம்"

"அதலாம் முடியாது சொன்னத செய்"

இணைப்பு துண்டிக்கப்பட்டது இருந்தும் அவன் ஏலம் விட்டுக்கொண்டே இருந்தான் அவள் பெயரை.

சூரியன் துயில் எழ காத்திருந்தான். சொன்னதை போலவே மார்கழி பனியின் குளிரையும் பொருட்படுத்தாமல் தாழ்வாரத்தின் இடுக்குகளில் காத்திருந்தாள். பின்பு ஏதோ ஒரு சப்தத்தை கேட்க நேர்ந்தாள். அதை கேட்ட மாத்திரமே ' மதன்' 'மதன்' என்று கூக்குரலிட்டாள். ஆனால் சப்தமோ நிசப்தாமாகி இருந்தது.
திடிரென சில்லென்ற குளிரில் வெப்ப மூச்சு காற்று அவள் மேல் வீசியது. அப்படியே அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அந்த மெல்லிய இருளில் யாரோ பின் தொடர்வதை உணர்ந்தாள். அலைப்பேசியை எடுத்து மதனை அலைக்க முற்பட்டாள். பாதகத்தி அதையும் இருளில் தவறவிட்டாள்‌‌. திசை தெரியாமல் தாழ்வாரத்தையே சுற்றி திரிந்தாள். தூரத்தில் ஒரு வெளிச்சம் வந்து வந்து சென்றது. அது மதனாக தான் இருக்கும் என அவள் அன்னிச்சைகள் கூறியது. நேரே சென்று பார்த்தால் அது மெச்சுப் படிகளின் சுவரோரம் பொருத்தப்பட்டிருந்த எடிசனின் படைப்பு. அந்த வெளிச்சத்தில் அவள் மனம் வெளிரி போனது. வெளிச்சம் மெல்ல வெளியே படர இது தான் தக்க தருணம் என கைப்பேசியை துலாவினாள், கண்டுபிடித்தேன் என ஓடினாள் அருகே சென்றவள் பேரதிர்ச்சியில் உறைந்தாள். கைப்பேசி அருகே மதன் கிடத்தப்பட்டதை கண்ட கலைக்கு மயக்கமே பிரசவமாயிற்று. அவனை மெல்ல அனைத்து கன்னங்களை தட்டினாள் ம்ஹூம் எழவில்லை. 'என்னடா ஆச்சு! எந்திரிடா" என சொல்லிக்கொண்டே என்னவோ முயற்சி செய்தாள். எதுவும் கதைக்கு ஆகவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுத அவளுக்கு மணியின் ஞாபகம் வந்தது.

வெண்தழல் தூரிகைWhere stories live. Discover now