சித்திரை மாத நிலவொளி

627 4 0
                                    

ஆம் கண்ணீர் தான் சிந்தியிருப்பான்.  உங்களுக்கு தெரியாத ஒன்று யானும் பாரதியும் மட்டும் அறிந்த ஒன்று அந்த அவளின் நெகிழ்வான தருணங்களை நினைத்து கண்ணீர் சிந்தியிருப்பான்.

இது எப்படி நிகழ்ந்தது என்று அவளுக்கு கடுகளவு கூட யோசனை இல்லை. அவள் சிந்தனை முழுவதும் அவன் நினைவுகளை சுமந்து கொண்டு அங்கும் இங்கும் அலைப்பாய்ந்தது. மணியும் கலையும் உடனை அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

மெல்ல நகரும் வேளையில் தான் அந்த சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று வெகுவாக விளங்கவில்லை. ஆனால் தாமதிக்காமல் கலை அவ்விடம் ஓடினாள். மணி அவளை பின் தொடர அவனுக்கு அங்கு அவகாசம் ஏதும் இல்லை.

சட்டென ஒரு கதறல் 'மணி! மணி..' என்று. மணியும் விரைந்து வந்தான்.

"என்ன கலை? என்னாச்சு!"

அவள் முகத்தில் பயம் கவ்வியிருந்தது. தொண்டை குழியில் எச்சில் விழுங்க எத்தனித்த குரலில் "மதன் பாடிய காணோம்!

"ஏய் என்ன சொல்ற..." என்றவாறே அருகில் சென்ற மணிக்கும் கதிகலங்கியது.

"இங்க எதோ தப்பா இருக்கு! உடனே நம்ம இங்க இருந்து போனும் ".

கலையும் அவனை  ஆமோதித்தாள்.

ஆளில்லா தாழ்வாரம் பனி விழும் இரவு, யார் என்ன செய்தார்கள், என்ன நடந்திருக்கும் என இருவரும் குழப்பத்துடனே அங்கிருந்து சென்றனர்.

யார் அந்த மதன்? கலைக்கும் அவனுக்கும் என்ன உறவு இவர்கள் இடையே உளவும் மணி யார் ? என மணித்துளிகள் மணியின் கண்களில் பின்னோக்கி நகர்ந்தன.

அது ஒரு வெயில் சுட்டெரித்த சித்திரை மாதம், மதன் தன் மூன்றாண்டு ஹாஸ்டல் வாழ்க்கையை துறக்க நண்பன் குடியிருப்புக்குள்ளே வீடு எடுத்து தங்கிட பேரவா கொண்டு வந்தான். மீதமிருக்கும் ஓராண்டையும் கழிக்க வந்தவனுக்கு ஹாஸ்டல் வாழ்க்கையை விட இந்த குடியிருப்பு வாழ்க்கை மிகவும் பிடித்து போனது. பின்பு பிடிக்காத என்ன? பரோலில் வெளிவந்த கைதி போல கூட்டை விட்டு வெளி வந்த குருவி போல அத்தனை மகிழ்ச்சி அவன் உள்ளம் முழுவதும்.

வெண்தழல் தூரிகைWhere stories live. Discover now