2 கண்டதேவர்

65 16 0
                                    

"பாஸ், உண்மையாத்தான் சொல்றீங்களா?" வசந்த் எதற்கும் அவ்வளவு எளிதாக ஆச்சரியப்படும் ஆள் கிடையாது.

"விளையாட்டில்லை வசந்த்! அறிவியலைவிட இந்த உலகத்துல சக்திவாய்ந்த ஒன்னு இருக்குனா அது மதம்தான். எத்தனையோ மதம், எத்தனையோ கடவுள். எல்லாமே ஒருவித திரைக்குப் பின்னால இருக்கு, ஆனா, ஒரு மதம் மட்டும் எல்லாத்தையும்விட அதிகமா நம்பகத்தன்மை பெற்றிருக்கு..."

"கண்டதேவர் வழி" வசந்த் மெதுவாய், அழுத்தமாய் உச்சரித்தான். நி.நா. நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டாள்.

"அவர் உண்மையாவே கடவுளைப் பார்த்தார்னு நீங்களும் நம்புறீங்களா?" இருவரையுமே கேட்டாள்,

"நம்புறேன் நம்பல, அதைத்தான் முடிவு பண்ணிக்க விரும்புறேன் நான்" ர.ரா தன் உள்ளங்கைகளை மெல்ல தேய்த்துக்கொண்டபடியே பேசினான் "மத்தவங்களுக்கும் இவருக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கு நீனா- ('நி.நா!') சாரி! கடவுளைப் பார்த்ததா சொல்ற யாருக்குமே அதுக்கான ஆதாரம் இல்ல, நம்பிக்கை அடிப்படைலதான் ஏத்துக்கப்பட்டாங்க, ஆனா கண்டதேவர் கதை அப்படியில்ல..."

"ஆமா நினூ, அவர் கடவுளைப் பார்த்ததை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்காங்க... ரெண்டு மூனு வெளிநாட்டு பயணிகள் கூட பார்த்திருக்காங்க... ஒரு பெரிய கூட்டத்துக்கு மத்தில இருந்தவர் அப்படியே ஒளிப்பிழம்பா மாறி காணாம போயிட்டாரு, ஒரு மணி நேரம் கழிச்சு அதே போல ஒளிப்பிழம்புல தோன்றித் திரும்பி வந்திருக்காரு... கடவுள் தன்கிட்ட பேசி, ஐந்து கட்டளைகள் கொடுத்ததா சொல்லிருக்காரு... அவர் திரும்பி வரப்ப ஒளிப்பிழம்புக்கு அந்தப் பக்கம் இருந்த கடவுளை அங்கிருந்த சிலரும் பார்த்திருக்காங்க... வெள்ளவெளேர்னு..." வசந்த் கொஞ்சம் உற்சாகம் தொற்றிக் கொண்டவனாய்க் காணப்பட்டான்,

நி.நா. மெதுவாக 'ம்ம்...' என்றாள், வசந்த் இலேசாய் சீற்றமடைந்தான், "நீ நம்பலேன்னா என்ன! ஆயிரக்கணக்கா டாக்குமெண்டட் எவிடன்ஸ் இருக்கு... ஒரு நாட்டுல இல்ல நாலு நாட்டுல, கண்டதேவர் ஒளியா மறைஞ்சு போயி திரும்பி வந்தது, ஒளிக்குள்ள மக்கள் பார்த்த கடவுளின் உருவம் எல்லாம் எல்லா ரெக்கார்டுலையும் ஒத்துப் போகுது... கல்வெட்டு, குகை ஓவியம், செப்பேடு எல்லாம் ஒத்துப் போகுது... ஐ.நா-வே வரலாற்றின் மிக நம்பகமான கடவுள் சந்திப்பு-னு சர்டிபிகேட் கொடுத்திருக்கு, சும்மா ஒன்னும் யாரும் மூவாயிரம் வருஷமா ஒரு விஷயத்தை நம்ப மாட்டாங்க நினு..."

கடவுளைக் கண்டவன்Where stories live. Discover now